சனி, 17 ஜனவரி, 2015

நாங்களும் புக் படிப்போம்ல..!!



நாங்களும் புக் படிப்போம்ல..!!
--------------------------------------------
நான் இன்னிக்கு ஒரு Book Review
எழுத போறேன்.

அதுவும் ஒரு English Book..
( என்ன கொடுமை சரவணா இது..? )
பயப்படாதீங்க...,

டிக்ஸ்னரி பக்கத்தில வெச்சிட்டு அப்படியே
மெதுவா எழுத்து கூட்டி தான் படிச்சேன்..
" Freedom " by Renu Sharma
( Ratna Sagar Publications )

இந்த Book-ஐ பார்த்தவுடனே படிக்கணும்னு
தோணும்.. காரணம் அட்டையில இருக்கிற
அந்த குழந்தை படம்..
ஆஹா.. என்ன அழகு..!!

இந்த புக்ல மொத்தம் 8 Short Stories..

முதல் கதை :
ஒரு டீச்சர், ஆறு ஸ்டூடண்ட்சை சுத்தி நடக்குது..
யாருக்குமே அடங்காம இருக்கறாங்க
ஆறு ஸ்டூடண்ட்ஸ்..
அவங்களை தன் வழிக்கு கொண்டு வர
அந்த டீச்சர் எவ்ளோ கஷ்டப்படறாங்கன்னு
ரொம்ப நகைச்சுவையா சொல்லி இருக்காங்க..

அதுக்காக அந்த டீச்சர் போடுற ஒவ்வொரு
திட்டமும் சபாஷ் போட வெக்குது..
சுருக்கமா சொன்னா..

இது ஒரு ஹாஸ்யமான, சுவாரஸ்யமான கதை
இந்த கதை முடிஞ்ச உடனே அடுத்த பக்கத்தை
திருப்பினா..

Meanings - 6

Fill in the Blanks - 5

Question and Answer - 5

இதெல்லாம் வேற இருக்கு..

ஹி., ஹி., ஹி.., இது பக்கது வீட்டு பையனோட
2nd Std English Book..

ஏன் அப்படி மொறைக்கறீங்க..?!!

நான் தான் முன்னமே English Book-ன்னு
சொன்னேன்ல..

பண்டிகையும் அதுவுமா அடிக்கப்பிடாது.....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக