இங்கிலீஷ் பேசுனாலும் தமிழன்டா
1. ATM மெஷின்-ல கார்டு சொருவி பேலன்ஸ் பாத்துட்டு, அப்றோம் பணம் எடுத்துட்டு மறுபடியும் பேலன்ஸ் பார்போம் .
2.சேர்த்து வெக்கிறேன் பேர்வழின்னு, எவங்கிட்ட வேணாலும் சீட்டுப் போட்டு கோட்டைய விடுவோம் .
3.கெத்துகாக குழந்தைகள இங்கிலீஷ் மீடீயத்துல சேத்துவிட்டுட்டு பீஸ் கட்டும் போது அலுத்துகிறது .
4.கேஸ் சிலிண்டர்ல காலண்டர் தேதிய கிழிச்சி ஒட்டி வைப்போம் .
5.எலெக்ட்ரிக் பில் தொடங்கி எல்லா பில்லையும் கடைசி நாள் கட்டுவது
6.கால் லிட்டர் பால்ல அரை லிட்டர் தண்ணி ஊத்தி டீ குடிக்கறது ,பால் கவர் எல்லாத்தையும் சேத்து வச்சு
மொத்தமா எடைக்கு போட்டு காசு பாக்குறது.
7.தீபாவளிக்கு வாங்குன வெடிய கொஞ்சம் வச்சு கார்த்திகைக்கு வெடி.ப்போம்
8.50 ரூபாய்க்கு ரீசார்ஞ் பண்ணி, எல்லாருக்கும் மிஸ்டு கால் கொடுப்போம் .
9.கரண்ட் இல்லனா பக்கத்து வீட்ல எட்டி பாக்குறது
10.தங்கம் விலை எறும்போதெல்லாம் ரொம்ப வருத்தப் படுவோம்.
11.அஞ்சு ரூவா பேலன்ஸ் குறைஞ்சா கஸ்டமர் கேர்க்கு போன் பண்ணி கழுவி கழுவி திட்றது.
12.செல்ஃபோன்ல எவ்ளொ பேலன்ஸ் இருக்குன்னு அப்ப அப்போ செக் பண்ணிக்கிறது..
13.கல்யாணம் முடிச்சிட்டு, ஒரு வார சட்னிக்கு தேவையான தேங்காய சின்ன புள்ளல்லாம் அனுப்பி பை வாங்குறது
14.தெருவில் காய்கறிகள் விற்க்கும் வயதான பாட்டியிடம் பேரம் பேசுவது ,சூப்பர் மார்கட்களில் மௌனமாக இருப்பது
15.ஊருல எவன் ஓசில காலண்டர் கொடுத்தாலும் தேடி போய் வாங்குவம்ல..
16.மூனுநாளு டூருக்கு போனாலும், ரெண்டுநாளைக்கு உண்டான புளியோதரை,பொங்கசோறு கட்டிக்கிட்டு போவோம்..
17.நள்ளிரவில் இருந்து பெட்ரோல் விலை லிட்டருக்கு 2ரூ ஏறுதுன்னு தெரிஞ்ச உடனே போய் 2 லிட்டர் பெட்ரோல் போடுவோம்.
18. புதுசா வாங்கின டிவி மேல டவல் போட்டு போர்த்தி வைப்போம்.
19.பர்சில் இருக்கும் ரூபாயிலேயே பழைய நோட்டாகப் பார்த்து முதலில் செலவு செய்வது:D
20. பிரபு ,சூர்யா, மாதவன் சொன்ன கடைல நகை வாங்கி,
விக்ரம் சொன்ன கடைல அடமானம் வைப்போம்..
இந்த மாதிரி ஒரு மொக்க ஸ்டேட்ஸ போட்டுட்டு
எத்தன Like வருதுனு கம்பியுட்டர் ஸ்க்ரீனயே
வெறிக்க பாக்குறது யாரு நம்ம பயகதேன். . .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக