வெள்ளி, 2 ஜனவரி, 2015

உலகத்தின் கடைசி நாள்

உலகத்தின் கடைசி நாள் அனைத்து மக்களும் எமலோகம் சென்று சொர்க்கத்தை அடைந்தனர். அப்போது அவர்களின் முன்னே கடவுள் காட்சி அளித்தார்... உரத்த குரலில் இங்கு நிற்கும் அனைத்து ஆண்களும் இரண்டு வரிசையாக பிரிந்து நில்லுங்கள் என்று ஆணையிட்டார்.. முதல் வரிசை : பெண்கள் என்ன சொன்னாலும் அதை அப்படியே கேட்கும் ஆண்கள்.. இரண்டாம் வரிசை : பெண்கள் எதை சொன்னாலும் எடுத்துக் கொள்ளாத ஆண்கள்... இரண்டு வரிசைகளையும் பார்வை இட்ட கடவுள் ஒரு நிமிடம் உறைந்து போனார்... முதல் வரிசையில் பல மைல் தொலைவிற்கு ஆண்கள் வரிசை இரண்டாம் வரிசையில் ஒரே ஒரு ஆண் மகன்.. கடுப்படைந்த கடவுள் கொஞ்சம் கோபத்துடன்... "பாருங்கடா என் சிங்கத்த ஆண் வர்க்கத்தின் பெருமையை உங்களுக்கு புரிய வைக்கிற இவரைப் பார்த்தா உங்களுக்கு எல்லாம் வெட்கமா இல்ல? உன்னை நினைச்சு நான் பெருமைப் படுறேன்... மத்த ஆண்கள் எல்லாம் இவரை பார்த்து கத்துக்குங்க. எப்படி நீ மட்டும் இவ்ளோ தைரியமா பொண்டாட்டிய ஒரு வகைல எடுத்துக்காம இருக்கே...நீ மத்தவங்களுக்கு எடுத்து சொல்லு என் சிங்கக்குட்டி".. சிங்கக்குட்டி அற்புதமா ஒரு சில வார்த்தைல விளக்கம் சொன்னாரு.. "அதெல்லாம் எனக்கு தெரியாது கடவுளே, என் பொண்டாட்டி இரண்டாவது வரிசைல தான் நிக்கணும் என்று சொன்னா நான் நின்னேன் அவ்ளோ தான்"

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக