கஸ்டமர்: அண்ணே ஒரு டீ போடுங்க.
,
மாஸ்டர்: சரிங்க சார்.
,
கஸ்டமர்: அண்ணே லைட்டா போடுங்க.
,
மாஸ்டர்: ஆகட்டும் சார்.
,
கஸ்டமர்: அண்ணே சுகர் தூக்கலா போடுங்க.
,
மாஸ்டர்: சிரிச்சுகிட்டே, போட்டே சார்.
,
கஸ்டமர்: அண்ணே ஆடை இல்லாம போடுங்கணே.
,
மாஸ்டர்: அப்றோ!
,
கஸ்டமர்: மேல டிகாஸன் விடாதீங்க.
,
மாஸ்டர்: இருப்பா ஏ இப்டி!
,
கஸ்டமர்: அண்ணே பால் நல்ல கெட்டியா இருக்குல!
,
மாஸ்டர்: அதெல்லாதா நல்லாதாங் இருக்கும்! குடிச்சுட்டு ,
எடத்த காலி பண்ணூ!
,
கஸ்டமர்: ஏன்ணே பெரிய க்ளாஸ் இல்லயா!
,
மாஸ்டர்: நீ குடுக்ற 5ரூபாக்கி இவ்ளோதா வரூம்!
,
கஸ்டமர்: ஏன்ணே நீங்க நாயரா?
,
மாஸ்டர்: ம்ம்ம்... இல்ல மாணிக்க வாசகரு!
,
கஸ்டமர்: அது ஏன்ணே, டீ கடைல இருக்க எல்லா மாஸ்டருமே பனியன் மட்டுமே போட்ருக்கீங்க?
,
மாஸ்டர்: ம்ம்ம்... கோர்ட் வாங்க காசு இல்ல, அதாங்!
,
கஸ்டமர்: ஏன்ணே, யார்னே இந்த டீ'ய கண்டுபுடிச்சது?
,
மாஸ்டர்: அது எனக்கு தெரியாது, ஆனா சுடுதண்ணிய யார் கண்டுபிடிச்சான்னு தெரியும்!
,
கஸ்டமர்: யார்ணே?
,
மாஸ்டர்: கொய்யால நான்தான்டா! மரியாதயா ஒடிரு, இல்ல மூஞ்சில ஊத்திடுவே!!!
புதன், 14 ஜனவரி, 2015
டீ கடை
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக