1.ஆசிரியர்: எவன் ஒருவனால் ஒரு
விசயத்தை மற்றவர்களுக்கு புரிய வைக்க முடியவில்லையோ அவன் ஒரு முட்டாள்...
மாணவர்கள்: புரியல சார்...
2.ஒரு ஆசிரியர் வகுப்பில் ஒரு
தேர்வு வைத்து, முடிவைக்
கொடுத்தார். ஒருவனுக்கு 12 புள்ளிகள் கிடைத்தது. ஆனால் அந்த மாணவ்ன் சிரித்துக்
கொண்டிருந்தான். ஆசிரியர் அவனிடன், 12 புள்ளிகளை எடுத்து விட்டு
சிரித்துக் கொண்டிருக்கிறாயே ஏன் என்று கேட்டார். அதற்கு அந்த மாணவன், நான் எந்த கேள்விக்கும் சரியான
பதில் எழுதி இருக்கவில்லை. அப்படி இருந்தும் 12 புள்ளிகளைப் போட்ட மடையன்
யாரென்று நினைத்து சிரிக்கிறேன் என்றான்.
3.ஆசிரியர் : கோபால், உன்னுடைய அப்பா என்ன வேலை
செய்கிறார்?
மாணவன் : என் அம்மா சொல்லும் வேலையை.
4.ஆசிரியர்: ஒரு மனிதன் கழுதையை
அடித்துக் கொண்டிருக்கும்போது அதை நான் தடுத்து நிறுத்தினால், நான் எந்த விதமான பண்பைக் காட்டி
இருப்பதாக அர்த்தம்?
மாணவன் : சகோதர பாசம்!
5.ஆசிரியர் : உன் பக்கத்தில
தூங்கறவனை எழுப்பு
சிறுவன் : தூங்க வைக்கிறது நீங்க ,எழுப்புறது நானா என்ன கொடுமை சார்
இது ?
6.ஆசிரியர்:என்னடா இது கணக்கு நோட்டுல
பால் கணக்கு, மளிகை
கணக்கு எல்லாம் எழுதிக்கிட்டு வந்திருக்க?
சிறுவன் :நீங்க தானே டீச்சர் சொன்னீங்க?
ஆசிரியர்:நான் எப்போடா சொன்னேன்.
சிறுவன் :நேத்து சாயந்திரம்.. எல்லோரும் வீட்டுக் கணக்கை
ஒழுங்கா எழுதிக்கிட்டு வாங்கன்னு சொன்னீங்களே? மறந்துட்டீங்களா?
7.டீச்சர் : ஏன்டா போன வருஷம் வேற
பொண்ணோட சுத்துன , இந்த
வருஷம் வேற பொண்ணோட சுத்துற?
மாணவன் : சிலபஸ் (Syllabus) மாறி போச்சு மேடம்
டீச்சர் : ???!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக