Time pass டையம் பாஸ்
Yesterday at 6:00pm ·
(சாப்ட்டு முடிச்சிட்டு இலையை மடிக்க போகிறார்)
சர்வர் - சார் இலையை மடிக்கதீங்க
மணி - எதுக்குயா மடிக்க வேணாம்னு சொல்ற நான் சாப்ட்டு முடிச்சிட்டேன்
சர்வர் - இதே இலையை தான் அடுத்த ஆளுக்கு போடணும் அதான் சொல்றேன் அப்படியே வைங்க
மணி - என்னது இதே இலையை போடுவியா?. அவரு சங்கட பட மாட்டாரா?
சர்வர் - நீங்க என்ன என்ன இப்ப சங்கட பட்டீங்களா?
####
சரவணன் - என்னைய இது டீல ஈ இருக்கு?
பிஸ்டல் மணி - அது வைட்டமின் ஈ அதனால சாப்புடுங்க உடம்புக்கு நல்லது
####
சரவணன் - சர்கரை போடாம ஒரு காபி
முத்துபாண்டி - ஓகே சார்
மணி - எனக்கு பில் போடாம ஒரு "டீ"
முத்துபாண்டி - என்ன சார் இப்படி கேக்குறீங்க?
மணி - அவருக்கு மட்டும் சர்க்கரை போடாம தரீங்க அப்ப எனக்கு தர மாட்டீங்களா?
முத்துபாண்டி - ???
####
பாலா - சர்வர் சாப்பாடுல கரப்பான்பூச்சி கிடக்குங்க.
சர்வர் - பரவால சாப்புடுங்க நாங்க அதுக்கெல்லாம் பில் போட மாட்டோம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக