வெள்ளி, 30 ஜனவரி, 2015

நண்பர் ஒருவர் பேசினார்

நண்பர் ஒருவர் பேசினார்

எட்டு வருடத்துக்கு முன்ன ஒரேயொரு கிழிஞ்ச பனியனோட சென்னைக்கு வந்தேன். இப்ப கையில 5லட்சம் வச்சிருக்கேன்னார்.

5லட்சம் கிழிஞ்ச பனியன்களை வச்சி என்ன பண்ணப்போறீங்கனு தான் கேட்டேன்

டமார்னு ஒரு சத்ததோட லைன் கட்டாகிடுச்சு.

பயபுள்ள கோவப்பட்டார் போல

எஸ் எஸ்

கணவனும், மனைவியும்

கணவனும், மனைவியும் இப்படி இருந்தா வீட்டுல களை கட்டும்தானே!!

இதோ... அது குறித்து .....

ஹாஸ்யானந்தா சுவாமிகள்

தன்னுடைய அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார்...!

1) வாரத்தில் இரண்டு நாட்கள் நாங்கள் ஹோட்டலுக்குச் செல்கிறோம் நேரத்தை மகிழ்ச்சியாகச் செலவிட.
ஆமாம்...!

நான் ஒரு ஹோட்டலுக்கும்...
அவள் ஒரு ஹோட்டலுக்கும்...!!

2) நாங்கள் தனி மெத்தையில் படுக்கிறோம்.

நான் படுக்கை அறையில்...!
அவள் ஹாலில்...!!

3) நான் அவளைப் பல இடங்களுக்கு அழைத்துச் செல்கிறேன்.
ஆனால் என்ன செய்ய...?
அவள்தான் திரும்பி வந்து வந்துவிடுகிறாளே!

4) நான் என் மனைவியிடம் கேட்டேன்.

"உன்னை நம் கல்யாண நாளுக்கு எங்கே அழைத்துப் போக வேண்டும்?“
அவள் சொன்னாள். "இது வரை போகாத இடத்துக்கு"
அதனால் அவளை சமையலறைக்கு போகச் சொல்லிவிட்டேன்!

5) நான் எப்போதும் அவள் கையைப் பிடித்துக் கொண்டிருப்பேன்.
இல்லாவிட்டால்,....

ஏதாவது கடைக்குள் நுழைந்துவிடுவாள்...!
எதையாவது வாங்குவதற்காக!

6) எங்கள் வீட்டில் அவள் உபயோகத்திற்கு எலெக்ட்ரிக் குக்கர், எலெக்ட்ரிக் மிக்சி, கிரைண்டர் எல்லாம் இருக்கிறது.

"வீட்டில் எல்லாம் 'ஒரே சாமானாக' இருக்கிறது; உட்காரவே இடமில்லை" என்று அவள் குறைபட்டுக் கொண்டாள்.
அதனால் ...

அவள் பிறந்த நாளுக்கு 'எலெக்ட்ரிக் நாற்காலி' வாங்கலாம் என்றிருக்கிறேன்.

7) என்னுடைய மனைவி தனது கார் சரியாக ஓடவில்லை. கார்பரேட்டரில் தண்ணீர் புகுந்து விட்டது என்றாள். போய்ப் பார்த்தேன்.

ஆம்..
கார் ஏரிக்குள் மிதந்து கொண்டிருந்தது!

8) குப்பை லாரி கிளம்பிவிட்டது அப்போதுதான் என் மனைவி வேகமாகச் சென்றாள், குப்பையைக் கொட்ட.
அந்த டிரைவரிடம் " நான் ரொம்ப லேட்டா? என்று கேட்டாள்.
அவர் சொன்னார்.

"பரவாயில்லை, உள்ளே குதித்து விடுங்கள்".

9) "உன்னுடைய ஐம்பதாவது கல்யாண நாளை எப்படிக் கொண்டாடப் போகிறாய்?" என்று நண்பர்கள் கேட்டார்கள்.

"இருபத்தைந்தாவது கல்யாண நாளன்று கல்கத்தாவிற்குச் சென்றோம்.

இப்போது வேண்டுமானால் அவளை அங்கிருந்து அழைத்து வரலாம்" என்றேன

இப்படியும் சில மனிதா்கள்


இப்படியும் சில மனிதர்கள்!

எதையும் பிராக்டிகலா திங்க் பண்றவர். எப்பவும் அடுத்தவங்களும் நல்லா இருக்கணும்�.
நாமளும் சந்தோஷமா இருக்கணும்� அப்படின்னு ஆசைப்படறவர்�

அவருக்கு ஒரு சமயம் தீடீர்ன்னு உடம்பு சுகமில்லாமே போயிட்டது�.
டாக்டர் கிட்டே போனார்�.பணம் குடுத்தார்�. வைத்தியம் பார்த்துக்கிட்டார்!

அவரு எழுதிக் கொடுத்த் மருந்து சீட்டை வாங்கினார். ஒரு மருந்துக் கடைக்குப் போனார்�
பணம் கொடுத்தார்� மருந்து வாங்கினார்� வீட்டுக்கு வந்தார்

அதுக்கு அப்புறம் அந்த மருந்தை சாப்பிடணும்லே� சாப்பிடலே! அப்படியே வச்சட்டார்!

அவரைப் பார்த்து கேட்டேன்.

''ஏன் சார்�இப்படி பண்றீங்க� வீண் செலவுதானே இது� நீங்க ஏன் டாக்டர்கிட்டே போய்
பணம் செலவு பண்ணிணீங்க?-ன்னேன்.
டாக்டர் வாழணுமில்லையா? அதுக்காக!- ன்னார்

சரி� அப்புறம் ஏன் மருந்து வாங்கினீங்க? -ன்னேன்.

மருந்துக் கடைக்கார்ர் வாழணுமில்லையா? அதுக்காக!-ன்னார்

சரி�அப்புறம் ஏன் வாங்கின மருந்தை சாப்பிடாமே வச்சுட்டீங்க?-ன்னேன்.

நான் வாழணுமில்லையா? அதுக்காக!-ன்னார் அந்த ஆள்!

வெள்ளி, 23 ஜனவரி, 2015

சங்க தலைவர் - மணி, சங்க துணைத்தலைவர் - ஜெமினி காதல் மன்னன் சங்க செயலாளர் - சரவணன் சங்க இணை செயலாளர் - முத்து பாண்டி சங்க பொருளாளர் - பாலா சங்க கொ.ப. செ - சுதா வருங்கால இளைஞ்சி அணித்தலைவி - பாம்பு ஹி ஹி ஹி . . . எப்புடி . . .?

சங்க தலைவர் - மணி,
சங்க துணைத்தலைவர் - ஜெமினி காதல் மன்னன்
சங்க செயலாளர் - சரவணன்
சங்க இணை செயலாளர் - முத்து பாண்டி
சங்க பொருளாளர் - பாலா
சங்க கொ.ப. செ - சுதா
வருங்கால இளைஞ்சி அணித்தலைவி - பாம்பு

ஹி ஹி ஹி . . .

எப்புடி . . .?

ஷப்பா.. மிடியல..

ஷப்பா.. மிடியல..

முட்டை போடாத பறவை எது..?
** ஆண் பறவை.

* ராத்திரியில சூரியன்
எங்கே போகுது..?
** எங்கேயும் போகல.,
இருட்டா இருக்கிறதால நம்மால
அதை பார்க்க முடியலை..

* பில் கேட்ஸ் மனைவி பெயர் என்ன..?
** Mrs.பில் கேட்ஸ்

* வருஷத்துல எந்த மாசத்துல 28 நாள்
இருக்கு..?
** எல்லா மாசத்துலயும் தான்..

* 1984-ல நம்ம Prime Minister பெயர்
என்ன.?
** நரேந்திர மோடி ( 1984 -லயும் அவர்
பெயர் அதுதானே )

* இந்தியாவுக்கும் இலங்கைக்கும்
என்ன வித்தியாசம்..?
** இந்தியா Map-ல இலங்கை இருக்கும்
ஆனா இலங்கை Mapல
இந்தியா இருக்காது..

* ஒரு வேளை நீங்க Germany- -ல
பிறந்து இருந்தா என்ன
பண்ணிட்டு இருப்பீங்க..?
** ரொம்ப கஷ்டப்பட்டுட்டு -இருப்பீங்க
உங்களுக்கு தான் German
பாஷை சுத்தமா தெரியாதே.
.

ஒரு விருந்து நடக்க இருந்தது.

ஒரு விருந்து நடக்க இருந்தது.

எதிர் பார்த்ததற்கு மேல் அழையாமலே நிறையப் பேர் வந்திருந்தனர்.அவ்வளவு பேருக்கும் உணவு பத்தாது.
என்ன செய்வது என்று ஏற்பாடு செய்தவர் யோசித்துக் கொண்டிருந்தார்.

அவருடைய நண்பர் ,''நான் சரி செய்கிறேன்,''என்று சொல்லிவிட்டு கூட்டத்தின் நடுவில் நின்று கொண்டு,
''இங்கு மாப்பிள்ளை வீட்டார் சார்பில் வந்திருப்பவர்கள் எழுந்து நில்லுங்கள்,''என்றார்.ஒரு நாற்பது பேர் எழுந்து நின்றார்கள்.''அதே போல் பெண் வீட்டார் சார்பில் வந்திருப்பவர்கள் எழுந்து நில்லுங்கள்,''என்று அவர் சொல்ல முப்பது பேர் எழுந்து நின்றார்கள்.

பின்னர் அவர் சொன்னார்,''இப்போது எழுந்து நிற்பவர்கள் எல்லாம் தயவு செய்து வெளியே செல்லுங்கள்.

ஏனெனில் இது இந்த வீட்டுக் குழந்தையின் பிறந்த நாள் விருந்து.''

புரிஞ்சவங்க கமெண்ட் பன்னுங்க..... புரியாதவங்க லைக் பன்னுங்க..........

வியாழன், 22 ஜனவரி, 2015

பாம்பு

யாரை அடித்தாலும்
வலிக்காம அடிக்கனும்

அது தான் என் பாலிசி

பாம்பு

அட அட என்னமா பீல் பண்றாங்கப்பா


அட அட என்னமா பீல் பண்றாங்கப்பா...!!

1. முருகன் கோவிலுக்கு போகாதே பெண்ணே !

மூன்றாவது மனைவியாக்கிவிடுவான் உன்னைக் கண்டால்...

2. லிப்டு கிடைக்குமா என்றேன்...
எங்கிருந்து எங்குடா என்றாள் அவள்...
லிப் டூ லிப் என்றேன் ...

3. கோயிலில் உனக்காக அர்ச்சனை செய்யும்போது, ’
அவள் நட்சத்திரம் என்ன?என்று கேட்டார்கள். ’
அவளே நட்சத்திரம்’ என்றேன்..

4. நண்பர்களுக்கு Lol சொல்லுகையில் அது "lots of laugh" என்றும்
உனக்கானால் அது "lots of love" என்றும் அர்த்தப்படுகிறது..

5. நீ என்னை மறந்து விட்டாய் என்பது எனக்கு தெரியும் ,

பாவம் என் இதயத்துக்கு தெரியாது
அது உனக்காக இன்னும் துடித்து கொண்டு இருக்கிறது...

6. நீ பிறந்தநாள் வாழ்த்து கூறிய ஒரு காரணமே போதுமானது,

நான் பிறந்ததற்காய் பெருமை கொள்வதற்கு....

7.இதயத்தில் ஓட்டை என்று டாக்டர் சொன்னார்,

பாவம் அவருக்கு எப்படி தெரியும் அது நீ நுழைந்த வாசல் என்று...

8.நீ நெருப்பை போன்றவள்
அதனால் தான் உன்னை எங்கு பார்த்தாலும் ஓடி சென்று அணைக்க துடிக்கிறேன்....

9.நீ இல்லாத இடமெல்லாம் இருட்டாகவே இருக்கிறது "

.கரண்டுக்கு சொன்னது அல்ல. காதலிக்கு சொன்னது...!!

10.பொறுக்கி' என்பதற்கும் 'ச்சீ.பொறுக்கி'என்பதற்கும்

எத்தனை வித்தியாசங்கள் பொண்ணுக சொல்லும்போது..

ரொம்ப புகழாதீங்க.......


தத்துவங்கள்..

1. நீ எவ்ளோ பெரிய படிப்பாளியா இருந்தாலும் எக்ஸாம் ஹால்ல போய் படிக்க முடியாது.

2. ஸ்கூல் டெஸ்ட்லே பிட் அடிக்கலாம்... காலேஜ் டெஸ்ட்லே பிட் அடிக்கலாம்... ஆனால் ப்ளட் டெஸ்ட்லே பிட் அடிக்க முடியாது.

3. ஆயிரம் தான் இருந்தாலும் ஆயிரத்து ஒண்ணுதான் பெருசு

4. என்னதான் அகிம்சாவாதியா இருந்தாலும் சப்பாத்தியை சுட்டுத்தான் சாப்பிட முடியும்.

5. காசு இருந்தா கால் டாக்சி!! காசு இல்லைன்னா கால் தான் டாக்சி!!!

6. பல்லு வலின்னா பல்லைப் புடுங்கலாம். ஆனா கண்ணு வலின்னா கண்ணைப் புடுங்க முடியுமா?

7. இட்லி பொடியைத் தொட்டு இட்லி சாப்பிடலாம். ஆனா மூக்குப் பொடியைத் தொட்டு மூக்கை சாப்பிட முடியாது.

8. பாண்ட் போட்டு முட்டிப்போட முடியும். ஆனா முட்டிப் போட்டு பாண்ட் போட முடியுமா?

9. இன்னைக்குத் தூங்கினா நாளைக்கு எந்திரிக்கலாம். ஆனால் நாளைக்குத் தூங்கினா இன்னைக்கு எந்திரிக்க முடியுமா?

10. பஸ்சுல கலெக்டரே ஏறினாலும், முதல் சீட்டு டிரைவருக்குத் தான்.

11. சைக்கிள் கேரியர்ல டிபன் கேரியரை வெச்சி எடுத்துட்டுப் போகலாம். ஆனால் டிபன் கேரியர்லே சைக்கிளை வெச்சு எடுத்துட்டுப் போக முடியாது.

12. டிக்கெட் வாங்கிட்டு உள்ளே போனா அது சினிமா தியேட்டர். ஆனால் உள்ளே போய்ட்டு டிக்கெட் வாங்கினா அது ஆபரேஷன் தியேட்டர்.

13. என்னதான் மீனுக்கு நீந்தத் தெரிஞ்சாலும், அதால மீன் குழம்புலே நீந்த முடியாது.

14. நீ என்ன தான் காஸ்ட்லி மொபைல் வச்சிருந்தாலும், அதுல எவ்வளவு தான் ரீசார்ஜ் பண்ணாலும், உன்னால உனக்கு கால் பண்ண முடியாது.

15. க்ரீம் பிஸ்கட்லே க்ரீம் இருக்கும், ஆனா நாய் பிஸ்கட்லே நாய் இருக்குமா?

16. ஒரு எறும்பு நினைச்சா 1000 யானைகளைக் கடிக்கும். ஆனால் 1000 யானைகள் நினைச்சாலும் ஒரு எறும்பைக் கூட கடிக்க முடியாது.

17. குவார்ட்டர் அடிச்சிட்டு குப்புற படுக்கலாம். ஆனால் குப்புற படுத்துக்கிட்டு குவார்ட்டர் அடிக்க முடியாது.

18. செல்போனுலே பாலன்ஸ் இல்லைன்னா கால் பண்ண முடியாது. ஆனால் மனுசனுக்கு கால் இல்லைன்னா பாலன்ஸ் பண்ண முடியாது.

19. ரயில்வே ஸ்டேஷன்லே போலீஸ் ஸ்டேஷன் இருக்கலாம். ஆனால் போலீஸ் ஸ்டேஷன்லே ரயில்வே ஸ்டேஷன் இருக்க முடியாது.

20. என்னதான் உயர பறந்தாலும் கொசுவை பறவை லிஸ்டில் சேர்க்கமுடியாது...

ரொம்ப புகழாதீங்க.......
புகழ்ச்சி எனக்கு பிடிக்காது.........
ஹி ஹி ஹி

புதன், 21 ஜனவரி, 2015

இளைஞா் காதல்

இளைஞர்கள் காதலி இல்லை என்று ஏங்குகின்றனர்.

ஆனால், காதல் இல்லாமல் கிடைக்கும் நன்மைகள்
பற்றி தெரிந்தால் இவர்கள் தங்களது ஆசையை விட்டு விடுவார்கள்.......

●●●பொய் சொல்வதை 90% குறைக்கலாம்
● நமது நேரம் மீதமாகும்.
●நன்றாக இரவில் நித்திரை கொள்ளலாம்.
●மிஸ்ட் கால் வந்தால் அதை பற்றிக் கவலை பட
தேவையில்லை
●எந்த ஹோட்டலிலும் சாப்பிடலாம்.
●எப்படி வேணுமானாலும் உடை உடுத்தலாம்.
●நாள்ளிரவில் what's app எஸ்.எம்.எஸ் வந்து தூக்கம் கலையாது.
●நல்ல கனவுகளை (டூயட் இன்றி) காணலாம்
●எல்லா பெண்கள்களோடும் கதை அளக்கலாம், பழகலாம்.
●உங்கள் செல்பேசி பில் கூடி,
தொடர்பு துண்டிக்கப்படாது.
‘இங்கே வா, அங்கே வா’ என்ற தொல்லை இருக்காது.

●அழகான காதல் கவிதை எழுதலாம் (நல்ல காதல் கவிதை
எழுத்தும் பெரும்பாலானோர் காதலித்தது இல்லை)
●பணம் மிச்சமாகும்.<important>
●தேவதாஸாக வாய்ப்புக்கள் கம்மி.
●வேலையை சிரத்தையுடன் செய்யலாம்
●நாலு நல்ல வார்த்தைகளைப் படிக்கலாம்
●காதல் காவியங்களை ரசித்து ருசித்து படிக்கலாம்
●பெற்றோர் நிம்மதிக்கு, மரியாதை கொடுக்கலாம்
●இஷ்டம் போல ஆடலாம்! <<<<

ஏதோ நம்மால முடிஞ்ச ஒரு பொது நல ஆலோசனை

அவ்வ்வ்வ்வ்..

ஹி ஹி ஹி ...........

ராதா டிச்சா்

   


ராதா டீச்சர் : வாஸ்கோடகாமா யாருன்னு தெரியுமா?

மணி: தெரியாது... !

ராதா டீச்சர்: முதல படிப்புல கவனம் செலுத்து...!!

மணி: பரிமளா ஆண்டி யாருன்னு தெரியுமா?

ராதா டீச்சர்: தெரியாது... !!

மணி: மொதல உன் புருஷன் மேல கவனம் செலுத்து...!!??

என்னமோ நடக்குது

மேல என்னா நடக்குது உங்களுக்கு தெரிஞ்சா கொஞ்சம் சொல்லுங்களேன்..

மணி


enaku oru doubt, ungalale mattum than clear panna mudium pls
71 - seventy one
61 - sixty one
51 - fifty one
41 - fourty one
31 - thirty one
21 - twenty one
ipdiyellam intha nmbrs Ku english le solrangale
apo
'11 - onety one' nu thane sollanum?
yen vera mathiri solranga?
Pls sollungalen..

செவ்வாய், 20 ஜனவரி, 2015

அடுத்த அப்துல்கலாம்...!!!

அடுத்த அப்துல்கலாம்...!!!

பக்கத்து வீட்டு பையன் பரிட்சைக்கு படித்துக் கொண்டிருந்தான்.

"தம்பி ... உனக்கு பரிட்சை எப்படி எழுதணும்னு தெரியுமா?"ன்னு கேட்டேன் நான்.
"சொல்லுங்க அங்கிள் ... தெரிஞ்சிக்கிறேன்"

"தம்பி, பரிட்சைக்கு மொத்தம் 3 மணி நேரம் கொடுப்பாங்க
..." "ம்ம்ம்ம்"

"முதல் 1 மணி நேரத்துல 10 மார்க் கேள்விய எழுதணும்"
"ம்ம்ம்"

"இரண்டாவது 1 மணி நேரத்துல 5 மார்க் கேள்விய எழுதணும்"
"ம்ம்ம்"

"அப்புறம் அரை மணி நேரத்துல் 2 மார்க் கேள்விய எழுதணும்"
"ம்ம்ம்"

"கடைசி அரை மணி நேரத்துல 1 மார்க் கேள்விய எழுதணும் ...
இதுல ஏதாவது உனக்கு சந்தேகம் இருந்தா கேளு"

"ஒரே ஒரு சந்தேகம் தான் இருக்கு"
"என்ன?" . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .

"மூணு மணி நேரமும் கேள்வியையே எழுதிகிட்டிருந்தா பதில் எப்போ எழுதுறது??"

(நமக்குன்னு எங்க இருந்துதான் வந்து சேருதுங்களோ)

மணி ஒரு வேலை இது எனக்கு எதிரா நடக்கும் வெளி நாட்டு சதியா இருக்குமோ.......

இதுக்கு எல்லாமா கோவப்படுவாய்ங்க...........

சரி வந்தது வந்துட்டீங்க.......

வந்த வேலைய பாருங்க....

நவீன வாழ்க்கையில் .............

நவீன வாழ்க்கையில் .............

தாங்க முடியாத வலிகள் :-
.
.
.
.
.
1.இரவு முழுவதும் Mobile Charge
போட்டு
காலைல எழுந்து பார்த்த Charger
Switch
போடாம இருக்கும்போது வரும்
வலி....
.
2. Downloading 99 % ல
வந்து Downloading failed !
ன்னு வரும் போது....
.
3. பொண்ணுங்க கூட Chat
பண்ணும் மட்டும்
Net கட் ஆகுரப்போ...
.
4. ஆர்வமா Browse
பண்ணும்போது Net Pack
முடிஞ்சு Main Balance ல
இருந்து காசஉருவுறப்போ...
.
5. status போட்டு 30 mins ago
ஆயும் ஒரு like கூட போடாம .

( இப்ப நீங்க பண்ற மாதிரி )

அழ வைக்கிறப்போ....

மாமா மாமீ


மாமா-மாமி:

மனைவி: இன்னைக்கு நைட் சாப்பிட என்ன வேணும்?
கணவன்: பருப்பும் சாதமும்.

மனைவி: நேத்துதானே அதைச் சாப்பிட்டோம்.
கணவன்: அப்படின்னா கத்திரிக்காய் வறுவல்.

மனைவி: உங்கப் பையனுக்குப் பிடிக்காது.
கணவன்: முட்டைப் பொரியல்?

மனைவி: இன்னைக்கு வெள்ளிக்கிழமை.
கணவன்: பூரி?

மனைவி: நைட் எவனும் பூரி சாப்பிட மாட்டான்.
கணவன்: நான் வேணா ஹோட்டல்ல இருந்து பார்சல்
வாங்கிட்டு வரவா?

மனைவி: ஹோட்டல் சாப்பாடு சாப்பிட்டா உடம்புக் கெட்டுப்போகும்.
கணவன்: மோர் குழம்பு?

மனைவி: வீட்ல மோர் இல்ல.
கணவன்: இட்லி சாம்பார்?

மனைவி: நீங்க முன்னாடியே சொல்லி இருக்கணும்.
கணவன்: அப்ப நூடுல்ஸ் பண்ணு. கொஞ்ச நேரத்துல செஞ்சுடலாம்.

மனைவி: சாப்பிட்ட மாதிரியே இருக்காது. பசி எடுக்கும்.
கணவன்: வேற என்னதான் சமைக்கப் போறே?

மனைவி: நீங்க என்ன சொல்றீங்களோ அது.
கணவன்: ஆணியே புடுங்க வேணாம் போடி!

திங்கள், 19 ஜனவரி, 2015

போட்டுத் தாக்கு–ஒரு ஜாலி ரிப்போர்ட்


போட்டுத் தாக்கு–ஒரு ஜாலி ரிப்போர்ட்

“முன் தினம் பார்த்தேனே, பார்த்ததும் பூத்தேனே” என்று காதலித்து பின் மணமுடித்த அல்லது “மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்” என்று அம்மா/அப்பா பார்த்த பெண்ணை மணந்துகொண்ட திருமணமான ஆண்களின்,

அன்றைய (திருமணத்திற்கு முன்)

இன்றைய (திருமணத்திற்குப் பின்)

சுவாரசியமான உரையாடல்களை ரிவைண்ட் செய்யலாமா?

தி.மு. (தொலைபேசியில்) — இன்னும் கொஞ்ச நேரம் பேசலாமே.
தி.பி.
— என்ன விஷயம் சீக்கிரம் சொல்லு. எனக்கு ஆஃபிஸில் நிறைய வேலை இருக்கு.

தி.மு. (பீச்சில்) – இந்த அலை எவ்வளவு அழகா இருக்கு. உன் கூட நிறைய நேரம் இப்படியே உட்கார்ந்திருக்கலாம் போல இருக்கு.
தி.பி. — போலாமா ? ரொம்ப நேரமாச்சு.

தி.மு. (ஹோட்டலில்) – நீ ஐஸ்கிரீம் சாப்பிடற அழகை பார்த்துக் கொண்டே இருக்கலாம். தினமும் இங்கேயே மீட் பண்ணலாமா?
தி.பி. — ஹோட்டல் எதுக்கு, ரொம்ப நேரம் வெய்ட் பண்ணனும். வீட்டிலேயே சிம்பிளா ஏதாவது பண்ணிடேன்.

தி.மு. (பஸ் ஸ்டாப்பில்)– ரொம்ப நேரமா பஸ்ஸுக்காக வெய்ட் பண்றீங்க போல இருக்கு. நான் வேணா டிராப் பண்ணட்டுமா?
தி.பி. — நீ பஸ்ல போய்டறியா? எனக்கு ஆஃபிஸுக்கு சீக்கிரம் போகணும்.

தி.மு. – ஆஃபிஸில இன்னிக்கு வேலை சீக்கிரம் முடிஞ்சிடுச்சு. அதான் பர்மிஷன் போட்டு உன்னைப் பார்க்க வந்தேன்.
தி.பி. – ஆஃபிஸில இன்னிக்கு நிறைய வேலை இருக்கு. ஈவ்னிங் வர லேட்டாகும்.

தி.மு. – நீ பேசறத கேட்டுண்டே இருக்கலாம் போல இருக்கு.
தி.பி. – ஏன் தொணதொணன்னு பேசிண்டே இருக்கே?

தி.மு. – இந்த லெமன் எல்லோ கலர் டிரஸ்ஸில தேவதை மாதிரி இருக்கீங்க.
தி.பி. – ஏதாவது ஒரு டிரஸ் போட்டுண்டு சீக்கிரம் கிளம்பேன், எவ்ளோ நேரம்.

தி.மு. – உன் கையால பண்ணா சாதாரண சாப்பாடு கூட விருந்து மாதிரி இருக்கு.
தி.பி. – சே, மனுஷன் சாப்பிடுவானா இந்த சாப்பாட்டை.

தி.மு. – இன்னிக்கு ஹாலிடே தான, எங்கயாவது வெளில போலாமா?
தி.பி. – நாளைக்கு கண்டிப்பா இந்த வேலையை முடிச்சு கொடுத்தாணும். அதனால வீட்டில பண்ணலாமேன்னு இருக்கேன்.

தி.மு. – ஒண்ணே ஒண்ணு தரட்டுமா ?
தி.பி. – ஒண்ணு குடுத்தேன்னா கன்னம் வீங்கிடும், ஜாக்கிரதை.

‘எப்படி இருந்த நீங்க இப்படி மாறிட்டீங்க’ ஏன் சார்?

(திருமணத்திற்கு முன் ஆண்களுக்கு அதிக பொறுப்புகள் கடமைகள் இல்லை அதாவது குட்டீஸ் இல்லை.

திருமணத்திற்கு பின் பொறுப்புகள் கடமைகள் ஆண்களின் ரொமான்சை பின் தள்ளுது..)

பெண்கள் இதை புரிந்து கொண்டால் வீட்டை சொர்க்கமாக்கலாம்.

ஆண்கள் தன் பொறுப்புக்கள் கடமைக்கு இடையிலும் ரொமான்ஸ் செய்தாலும் வீட்டை சொர்க்கமாக்கலாம்)

ஆண்கள் கல் மணல் வைத்து கட்டிடம்தான் கட்டிக்கொடுக்கமுடியும்.

அதை வீடாகவும், இல்லமாகவும், கோவிலாகவும் அல்லது நரகமாகவும் சுடுகாடாகவும் வைத்திருப்பது பெண்கள் கையில்தான் உள்ளது.

இதில் நீங்க எப்படி.........?
14 hrs · Public

புது மனைவி

புது மனைவி

கையில் கலக்கிக் கொடுத்த பானம்
இன்னதென்று யூகிக்க இயலாவிடினும்
ஏதோ ஓர் அனுமானத்தில்
புது மனைவியைக் குளிர்விக்க எண்ணி
”தேநீர் மிகப் பிரமாதம்,” என்றேன்;.

”அது புரூ காபிப்பா,” என்றாள் அவள்,
இது கூடத் தெரியவில்லையே என்ற
ஏளனத்தை முகத்தில் தேக்கியபடி!

உப்பும், மிளகாய்த் தூளும்
வஞ்சனையின்றி வாரி வழங்கி
அம்மணி சமைத்த சாப்பாட்டை
விழுங்கவும் முடியாமல்
துப்பவும் முடியாமல் நான் தவிக்க,

”சிரமப்பட்டு நான் செஞ்ச சமையலை
வாயைத் தொறந்து, ரெண்டு வார்த்தை
பாராட்டினா முத்தா விழுந்துடும்?
பாராட்டவும் ஒரு மனசு வேணும்,
அது ஒங்கக்கிட்ட இல்லை,” என்றாள்
முகத்தை ஒன்றரை முழம்
தூக்கி வைத்துக் கொண்டு!

வேறொரு நாள்...

”சமையலில் கை தேர்ந்து விட்டாய்;
இன்று உன் சமையல் அருமை” என்றேன்;

”சமைத்தது உங்க ளம்மா;
தெரிந்து கொண்டே, வேண்டுமென்று
என்னைக் வெறுப்பேற்றுகிறீர்”என்றாள்,
கடுகு வெடிக்கும் முகத்துடன்!

மனைவியின் பிறந்த நாளை
அரும்பாடுபட்டு நினைவில் நிறுத்தி
பத்துக் கடை ஏறி இறங்கி
ஆசையாய் வாங்கிப் பரிசளித்த
பச்சை வண்ணப் புடவையைத்
தூக்கி ஓரத்தில் வைத்தாள்,

”ஒங்களுக்குத் தேர்வு செய்யவே
தெரியலை,” என்ற விமர்சனத்துடன்!
’இங்கிலீஷ் கலர்’(!?) தான் பிடிக்குமாம் அவளுக்கு!

சினிமா ஆசைப்பட்டாள் என்பதற்காக
வரிசையில் நின்று அடிபட்டு, மிதிபட்டு
புதுப்படத்தின் முதல் நாள் காட்சிக்கு
டிக்கெட் வாங்கி வந்தால்,

”பாழாய்ப்போன இப்படத்துக்கு வந்ததுக்குக்
கடற்கரைக்காவது போயிருக்கலாம்;
படுமட்டம் ஒங்க ரசனை,”என்றாள்
படம் பார்த்து முடித்த பிறகு!

இவளைத் திருப்திப்படுத்த முடியாது
என்றவுண்மை எனக்கு உறைத்த போது,
வெட்ட வெளியில் நின்ற வண்ணம்
”என்னைப் பிடிக்காதவளாக
இருந்துவிட்டுப் போடி!” என்று
வாய் விட்டுக் கத்தினேன்,

அவள் பக்கத்தில் இல்லையென்பதை
உறுதி செய்து கொண்டு!

புது மாப்பிள்ளை கோபி மைண்ட் வாய்ஸ் ...........

ஞாயிறு, 18 ஜனவரி, 2015

டிக்கெட் பரிசோதகா்


டிக்கெட் பரிசோதகா்:- ஐயா, டிக்கெட் கொடுங்க...!

பயணி:- பஸ முன்னாடி கண்டக்டா் நிக்கறாரு பாருங்க, அவர்கிட்ட கேளுங்க!

பரிசோதகா்:- என்ன குசும்பா? நான் 'செக்கா்'யா, உங்க 'பயண சீட்'டை காட்டுங்க!

பயணி:- கொஞ்ச முன்னாடி வரைக்கும் அந்த சீட்ல உட்காா்ந்து இருந்நேன், இப்பதான் இந்த சீட் கெடச்சுதுங்க!

பரிசோதகா்:- (கடுப்புடன் பக்கத்திலிருந்தவர் டிக்கெட்டை காட்டி) நான் கேக்கறது இந்த டிக்கெட்டைய்யா...!

பயணி:- இதுவா... கண்டக்டர் எனக்கு டிக்கெட் எடுக்க வேணாமுன்னு சொல்லிட்டாா்!

பாிசோதகா்:- என்னய்யா சொல்றே, ஏன் வேணாமுன்னு சொன்னார்...?

பயணி:- அவா்தான குழந்தைங்களுக்கு டிக்கெட் எடுக்க வேணாமுன்னு சொன்னாா்... என் பேருகூட "குழந்தை"தாங்க!

பாிசோதகா்:-?????????

வேளை




பாலா: உங்க அப்பா என்ன செய்யறார்?

பாலகுமார்: எங்க அம்மா சொல்ற எல்லா வேலையிய்யும் அவர்தான் செய்வாரு

மணி



மனைவி -ஏங்க...டாக்டர்கிட்டே...ஏதோ...தனியா...
பேசபோறேன்னு போனீங்க அவரு கோவமா
என்னவோ காரி துப்பினாரே.. என்ன கேட்டு தொலைச்சீங்க....

மணி- யாருகிட்டேயும் சொல்ல கூடாது. சரியா...!!

மனைவி - என்ன கேட்டு தொலைச்சீங்க? அதை சொல்லுங்க மொதல்ல.

மணி - அது ஒண்ணுமில்லேம்மா. டாக்டர் பச்சைக் காய்கறிகளை மட்டும் தான் கண்டிப்பா சாப்பிடனும்னு சொன்னாருல்லே..

மனைவி - ஆமா அதுக்கென்ன இப்போ....?

மணி - நீங்க சொன்ன பச்சை காய் கறியெல்லாம்
எங்க வீட்டுலே ஒரு ஆடு இருக்கு. அதுக்கு திங்க கொடுத்துடறேன் டாக்டர். நான் அந்த ஆட்டை...
திங்கலாமான்னு கேட்டதுக்கு கோபப்படுராருடீ!

ஸ்டார்ட் த மீஜிக் பிரம் த மனைவி..............