சனி, 7 பிப்ரவரி, 2015

நாகு: "உன் வீட்டுக்காரர்

நாகு: "உன் வீட்டுக்காரர் மதுரைல என்னவா இருக்காரு"..?

சுதா: " அங்கேயும் என் வீட்டுக்காரராத்தான் இருக்காரு"!!..
------------------------------------
மணி: "எனக்கு வேலை இல்லைனு தெரிஞ்சும் எப்படி நம்ம கல்யாணத்துக்கு ஒத்துகிட்டாங்க"..

மணிமாலா: "பையன் என்ன பண்ணுறான்னு கேட்டாங்க, வயத்துல உதைக்குறான்னு சொன்னேன்... அதான்"...
-------------------------------------------
நித்திய ஸ்ரீ: என்னங்க பையன் ஸ்கூலுக்கு டைம் ஆய்டிச்சி! டிபன் சாப்பிட மாட்டேன்னு அடம்பிடிக்குறான்!
கொஞ்சம் என்னன்னு கேளுங்க!

கணவன்: என்ன டிபன்?
நித்திய ஸ்ரீ: ரவை உப்புமா!
கனவன்:சரி நான் பாத்துக்கறேன்! விடு!

(மைண்ட் வாய்ஸ்: என்னைய மாதிரியே அவனும் கொடுமை அனுபவிக்கனுமா?)

10 நிமிஷம் கழிச்சி நித்திய ஸ்ரீ ஆச்சரியமா கேட்டாங்க!

எப்படிங்க மொத்தத்தையும் சாப்பிட்டான்? அப்படின்னு!

கணவன்: ஒண்ணுமில்ல! இப்ப சாப்பிடலன்னா நான் அம்மாகிட்ட ரவை உப்புமா சூப்பரா இருக்குன்னு சொல்லிடுவேன்! அப்புறம் இன்னும் ஒரு வாரத்துக்கு நம்ம வீடல இதான் டிபன் அப்படின்னு சொன்னேன்!
பய கண்ண மூடிட்டு வாய்ல அள்ளி கொட்டிட்டு ஸ்கூலுக்கு ஓடிட்டான்!
-----------------------------------

கணவன்: அடியே இவன்தான் உன் கள்ளக் காதலனா? பார்க்க பிச்சைக்காரன் மாதிரி இருக்கான்..!

ராதா: சனியனே..! குடிச்சுட்டு கண்ணாடி முன்னாடி
நிக்காம போய் படு..!

####
தனலட்சுமி: திருடன் சமையலறையில் புகுந்து நான் சமைச்சு வச்ச பிரியாணியை எடுத்து சாப்பிட்டுகிட்டு
இருக்கான்…உடனே போன் பண்ணுங்க…!

கணவன்: போலீஸூக்கா…ஆம்புலன்ஸூக்கா..
####
கீதா: பக்கத்து வீட்டுக்காரி உங்களுக்கு சபலபுத்தி இருக்குன்னு சொல்றா…!
மணி: பார்த்தியா ! நீ எனக்கு புத்தியே இல்லைன்னு சொன்னியே…!
####
சரவணன்: என் மனைவி தினமும் சாம்பார் வெச்சே கொல்றா
டாக்டர்…!
அதுக்கு நான் என்ன செய்ய முடியும்..?
சரவணன்: அவ சாம்பார் வைக்கறதை மறக்கற மாதிரி ஏதாவது மருந்து இருந்தாக் கொடுங்க…!
####
பாலா: நம்ம பையன் கேர்ள்ஸ் ஹாஸ்டல் பக்கமா சுத்தறான், உமா..!
மனைவி: நீங்க எப்ப பார்த்தீங்க..?
பாலா: வுமன்ஸ் ஹாஸ்டல் பக்கம் போயிட்டு வர்றப்ப பார்த்தேன்…!
####
நீதிபதி : திருமணமாகி 14 வருஷத்துக்கு பிறகு உன்
மனைவியை கொலை செய்தாயா?
ஜெமினி காதல் மன்னன் : ஆமா எசமான்

நீதிபதி : உனக்கு ஆயுள் தண்டனை விதிக்கிறேன்.
நடுகடல் நாயகன்: எசமான் இத்தனை வருஷம் அதை தானே அனுபவிச்சிகிட்டு இருந்தேன்..

####
கடைக்காரர் செல்வம்: யோவ். என்ன இது ? பழையசோறைக் குடுத்துட்டு புது குக்கர் கேக்கறே?

மணீ: நீங்கதானே பழையதைக் குடுத்துட்டு புது குக்கர்
வாங்கிக்கலாமுன்னு விளம்பரம் செஞ்சீங்க .
####

-------------------------------------
அடிக்கபிடாது.......... பேச்சு பேச்சாத்தான் இருக்கனும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக