திங்கள், 22 செப்டம்பர், 2014

வினாயகர்

வினாயகர் சதுர்த்தி விரதம்
விநாயகருக்கான விரத
நாட்கள் அனேகமாக சதுர்த்தித்
திதியன்றே கூடுவதை அவதானிக்கலாம்.
சுக்கில பட்ச சதுர்த்தி என்றும் கிருஷ்ண
பட்ச சதுர்த்தி என்றும்
இரண்டு சதுர்த்தி விரத தினங்கள்
மாதாந்தம் சம்பவிக்கின்றன. கிருஷ்ண
பட்ச சதுர்த்தியை சங்கடஹர
சதுர்த்தி என்பர். சுக்கில பட்சச் சதுர்த்தியை
'சதுர்த்தி விரதம்'
என்று கொள்வர். அவற்றுள்ளும்
ஆடி மாதத்தில் வருகின்ற சுக்கில பட்சச்
சதுர்த்தியை 'நாக சதுர்த்தி' என்றும்
ஆவணி மாதத்தில் வருகின்ற சுக்கில
பட்சச் சதுர்த்தியை 'விநாயக சதுர்த்தி'
என்றும் கைக்கொள்கின்றனர்.
ஆவணி வளர்பிறைச் சதுர்த்தியே விநாயகர்
அவதரித்த நாளாகும் என்பர்.
விநாயகர்
சதுர்த்தி விரதத்தை ஒரு கொண்டாட்டமாகவே நாம்
பாவிக்கலாம். இந்த
ஆண்டு ஆவணி மாதம் 24 ஆம்
திகதி புதன்கிழமை 09.09.2013 இந்த விரத
தினம் அனுஸ்டிக்கப்படவிருக்கிறது.
விநாயகர் மிகவும் எளிமையான கடவுள்.
யார் கூப்பிட்டாலும் ஓடோடி வந்து அருள்
தருவார். மஞ்சளில், அல்லது பசும்
சாணத்தில்
ஒரு உருண்டை பிடித்து வைத்தாலே அவர்
வினாயகர் ஆகி விடுகிறார்.
அதனால்தான் அவர் எல்லாருக்கும்
பொதுவாகவும் யாரும்
சுலபமாக வழிபடும் வகையிலும்
இருக்கிறார்.
எல்லாவற்றிலும்
மேலாக பத்தி, சூடம் மற்றும் நறுமணப்
பொருட்கள் போன்றவை எல்லாம்
இல்லாமல் எளிமையாக உடலின்
பாகங்களினாலேயே அவரை வழிபட்டால்
சிறப்பான பலன்கள் கிட்டும்.
எப்படியாயின் இரண்டு கைகளினாலும்
தலையில் குட்டி, இரண்டு காதுகளையும்
பிடித்த படி தோப்புக் கரணம்
போட்டாலே போதுமானது. இந்த இடத்தில்
இந்த குட்டிக் கும்பிடுதல் மற்றும் தோப்புக்
கரணம் போடுதல்
போன்றவற்றை சற்று உன்னிப்பாக கவனிக்க
வேண்டும். இந்த முறையால்
நமது மூளை புத்துணர்ச்சி பெற்று சிறப்பாக
வேலை செய்கிறது. இதற்கான
ஆன்மீக ரீதியான விளக்கம்
யாதென பார்ப்போமானால் -
நாம் தோப்புக் கரணம் போடும்
போது நமது உடலில் தூங்கிக்
கொண்டிருக்கும்
குண்டலினி சக்தி தட்டி எழுப்பப் படுகிறது.
குட்டிக் கும்பிடும் போது நமது தலையிலிருக்கும்
அமிர்த கலசத்திலிருந்து அமிர்தம்
சிந்தி உடல் பூராவும்
பரவி நமக்கு சுறுசுறுப்பும் புத்துணர்வும்
தருகிறது. இந்த தத்துவத்தை இன்றைய
அறிவியல் உலகமும் ஏற்றுக்
கொள்கிறது. தீய
எண்ணங்கள், தீய சிந்தனைகள்
வளர்வதில்லை. அன்றைய நாட் களில்
பள்ளிக்கூடங்களில் சரியாக படிக்காத
மற்றும் சேட்டைகார
மாணவர்களை தண்டிக்க தலையில்
குட்டுவது மற்றும் தோப்புக் கரணம்
போன்றவைதான் ஆசிரியர்களால்
பயன்படுத்தப்பட்டது. இதன்
காரணமாக அன்றைய மாணவர்கள்
ஒழுக்க சீலர்களாக இருந்தனர்.
ஆனால் இன்று இவை தடுக்கப்பட்ட
காரணத்தினால் தனி மனித ஒழுக்கம்
சீரழிந்து கற்பழிப்பு விகிதா சாரம் மிக
மிக உயர்ந்துள்ளது. இந்த நிலைக்nதிராக
போராட வேண்டிய நிலையில் மக்கள்
இருக்கின்றனர்.
வினாயகர் சதுர்த்தி விரதம்
எப்படி ஆரம்பித்திருக்கலாம்
என்பதற்கு ஒரு கதையுள்ளது. தன்
கணவரான
இறைவனை அவமதித்து யாகம் நடத்திய
தந்தை தட்சனிடம் நியாயம் கேட்கப்
போனாள் தாட்சாயணி ஆன
பார்வதி தேவி. ஆனால் தட்சனோ மிகவும்
கர்வம் பிடித்தவன்.
மருமகனை அவமானப்படுத்தியது போதாதென்று மகளையும்
கேலி பேசினான். இந்த
அவமானத்தை பொறுத்துக்
கொள்ள முடியாத
தாட்சாயணி தேவி தட்சன்
வளர்த்து வைத்திருந்த யாக குண்டத்தில்
அப்படியே பாய்ந்துவிட்டாள். அதன்
பிறகு பர்வதராஜனுக்கு மகளாகப்
பிறந்து பார்வதி என்னும் பெயருடன்
வளர்ந்து வந்தாள்.
சிறு வயதிலிருந்தே கயிலைநாதன்தான் தன்
கணவன் என்று தீர்மானமாக
இருந்தாள். அவளுடைய அந்த எண்ணம்
பலிக்க வேண்டும் என்றால் அவள்
விநாயகரை நினைத்து சதுர்த்தி விரதம்
மேற்கொள்ள
வேண்டுமென்று அவளுடைய தந்தையார்
பர்வதராஜன்
யோசனை சொன்னார். அவர்
சொன்னபடியே மண்ணால்
ஒரு விநாயகர்
விக்ரகத்தை உருவாக்கினாள் பார்வதி.
கூடவே தங்கத்தாலும் ஓர் உருவம்
செய்து இரண்டையும்
பொற்கும்பம் ஒன்றின் பக்கத்தில்
வைத்தாள்.
அந்த விக்ரகங்களுக்கு ஆகம
விதிப்படி பூஜைகளை செய்தார்கள
அன்னை பார்வதி தேவி. ஆவணி மாத
அமாவாசைக்கு அடுத்த சதுர்த்தியில்
இப்படி பூஜையை ஆரம்பித்து
பௌர்ணமிக்கு அடுத்த சதுர்த்தி வரையில்
தினமும் பூஜை செய்தார்கள. அதற்குப்
பிறகு மண் பிள்ளையாரை மேள
தாளத்தோடு ஊர்வலமாக எடுத்துப் போய்
நதியிலே இறக்கி விட்டார்கள். அந்த
பதினைந்து நாட்களும் நியம
நிஷ்டைகளை மீறாமல் இருந்த
விரதத்தின் பலனாக தான்
ஆசைப்பட்டாற்போல
கயிலைநாதனை கைப்பிடித்தார்கள்.
இதிலிருந்து தான் வினாயனர்
சதுர்த்தி விரதம் கடைப்பிடிக்கும்
முறை ஆரம்பித்திருக்கிறது என நாம்
அனுமானிக்கலாம்.
தேவி பார்வதி மத்தியான
நேரத்திலேயே வினாயகரை வழிபட்டு வந்தார்கள்
அதனால் வினாயகர் சதுர்த்தி பூசைகள்
மத்தியான நேரத்தில் செய்யப்
படுவதே சரியாக இருக்கும். அந்நேரத்தில்
விநாயரைக் குறித்து விரதம்
அனுஷ்டித்து வழிபடுபவர்களுக்கு விநாயகரின்
அருளும், சுகபோக சௌபாக்கியங்களும்
கிடைக்கப் பெறுவது நிச்சயம் என்றும்
கூறுவர்.
இந்தியா முழுவதும்
இதனை போற்றிக் கொண்டாட
காரணமாக இருந்தவர் பால
கங்காதர திலகராகும். சுதந்திர
போராட்டத்தின்
போது இந்துக்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்துவதாற்காக
இந்த
விரதத்தினை ஒரு பொது நிகழ்ச்சியாக
கூட்டு வழிபாடாக நடத்தினார்.
இதன் காரணமாகவும்
மக்களின் நேரமின்மை காரணமாகவும்
தற்காலத்தில் வினாகர்
சதுர்த்தி விரதமானது ஒருநாள்
விரதமாக மாறிவிட்டது.
களிமண்ணினாலான வினாயகர்
சிலைகளை காலையில்
வாங்கி வந்து அவரிற்கு அருகம்புல்
எருக்கம்பூ அணிவித்து தங்கள்
தங்களிற்கு தெரிந்த வழிமுறையில்
நைவேத்திய ஆராதனைகள்
செய்து வணங்குகின்றனர். பின்னர
அன்று இரவோ அல்லது மறுநாள்
காலையிலோ ஏதாவது ஒரு நீர் நிலையில்
சென்று சேர்ப்பித்து விடுகின்றனர்.
இந்த
விரதத்தை காலையிலிருந்தே உணவு எதுவும்
எடுத்துக் கொள்ளாமல்
அனுஷ்டிப்பது மிகவும் விசேஷம். பூஜை நேரம்
வரை பட்டினியாக இருப்பது சிறப்பு.
புற்று மண்ணால் விநாயகப்
பெருமானின் திருவுருவம் அமைத்து.
அதில் விநாயகரை மந்திரம்
பாவனை கிரியைகளால் எழுந்தருளச்
செய்து அபிஷேக அலங்காரங்கள்
செய்து நிவேதனப் பொருள்கள்
வைத்துப் போற்றி வழிபடுதல் முறையாகும்.
நிவேதன வகையில் மோதகம் அப்பம்
எள்ளுருண்டை அவல்
பெரி கரும்பு விளாம்பழம்
முதலியவை சிறந்தவையாகும்.
அவருக்கு உகந்த மலர்கள்
தும்பை வன்னி எருக்கு அறுகு கொன்றை முதலியவையாகும்
இவ்விதம் வினாயகப்
பொருமானை வழிபட்டு மறுநாள்
அவ்வுருவத்தைத்
திருக்குளத்திலோ புண்ணியஆறுகளிலோ விட்டு விட
வேண்டும்.
சம்பிரதாயம் பார்க்கக்
கூடியவர்கள் இந்த விநாயகர்
சதுர்த்தி நாளிற்கு பிறகும்
தொடர்ந்து விரதத்தை அனுசரிப்பார்கள்.
அப்படித் தொடர்ந்து பௌர்ணமிக்குப்
பிறகு வரும்
சதுர்த்தி தினத்தோடு விரதத்தை நிறைவு செய்வார்கள்.
இத்தனை நாள் விரதத்துக்குப் பிறகுதான்
பிள்ளையாரை கிணற்றிலோ அல்லது ஏதாவது நீர்நிலையிலோ கொண்டுபோய்
போடுவது வழக்கம்.
எப்படி விரதத்தை கடைப்பிடித்தாலும்
சரி மேற்கொள்ளும்
விரதத்தை உளப்பூர்வமாகக் கடைப்பிடிக்க
வேண்டியதுதான் முக்கியம்.
பொதுவான வினாயகர்
வழிபாட்டினை பொறுத்த வரையில்
ஒவ்வொரு மாதமும்
வளர்பிறை தேய்பிறைகளில் வரும்
சதுர்த்தி திதிகள் வழிபாட்டுக்கு உகந்தவை.
வளர்பிறை ( சுக்லபட்ச) சதுர்த்தி திகதியின்
அதிபதியான தேவி தன்னை அவருடைய
இருப்பிடமாகச்
செய்து கொள்ளுமாறு வேண்டினாள்
அதற்கு அருள் புரிந்த விநாயகர் நான்
உங்களிற்கு மத்தியானத்தில்
காட்சி அளித்த படியால் சுக்லபட்ச
சதுர்த்தியும் மத்தியானமும் கூடிய
நன்னாளில் என்னை வழிபடுவோர் என்
அருளைப் பெறுவர்.
சதுர்த்தியன்று ஆகாரமில்லாமல்
என்னை வழிபடுவோருக்கு அறம்
பொருள் இன்பம் வீடு என்னும்
நான்கு பேறுகளையும் வழங்குவேன்
என்றார். இதனையும் வினாயகர்
வழிபாட்டில் நாம் கருத்தில்
கொள்ள வேண்டும்.
வினாயகர் வழிபாட்டிலிரு;து நாம்
தெரிந்து கொள்ளக் கூடிய சில
தத்துவங்கள் வருமாரு:-
புல்லையும் (அருகம்புல்) அவர்
ஏற்றுக் கொள்கிறார்.
காட்டுப்பூவான எருக்கம்பூவைக் கூட அவர்
மறுப்பதில்லை. இதன் மூலம் வினாயகர்
தனக்கு எந்த
பொருளோ அல்லது ஆன்மாவோ தாழ்ததாக
படவில்லை எனக் காட்டுகிறார்.
எங்கிருந்து வந்ததோ அது அங்கேயே செல்ல
வேண்டும் என்ற தத்துவம் களிமண்
வினாயகர் வைத்து வணங்குவதன் மூலம்
உறுதிபடுத்தப்படுகிறது.
அதாவது மண்ணினால்
செய்யப்பட்ட வினாயகர்
சிலை மீண்டும் நீரில்
கரைக்கப்பட்டு மண்ணிற்கே செல்கிறது.
அவரிற்கு மிகவும் பிடித்தமான
கொழுக்கட்டையை எடுத்துக்
கொண்டோமானால்
வெளியிலிருக்கும்
மாவு பகுதி மாயையும்இ உள்ளேயிருக்கும்
பூரணமானது பரிபூரணமான
பிரம்மத்தையும் குறிக்கும். மாயை விலகும்
போது பிரம தரிசனம் கிடைக்கும் என்ற
தத்துவத்தைக் காட்டுகிறது.
வினாயகரை கீற்
கண்ட 21 பத்திரங்களால் வழிபடும்
போது சிறப்பான பலன்களைப்
பெறலாம்.
ஒவ்வொரு பத்திரத்திற்கும்
ஒரு சிறப்பான பலன் உள்ளது. பத்திரம்
எதுவானாலும் மன ஒருமுகப்பாடே மிக
முக்கியமானது.
             முல்லை இலை
கரிசலாங்கண்ணி இலை
வில்வம் இலை அறுகம்புல்
இலந்தை இலை ஊமத்தை இலை
வன்னி இலை நாயுருவி
கண்டங்கத்தரி
அரளி இலை
எருக்கம் இலை விஷ்ணுகிராந்தி இலை
மாதுளை இலை
தேவதாரு இலை
மருக்கொழுந்து இலை அரசம்
இலை
    ஜாதிமல்லி இலை தாழம் இலை
அகத்தி இலை மருதம் இலை
நாவல் இலை
(அறுகு வேருடன்கூடிய வெள்ளறுகு மிகச்
சிறந்தது என்று கூறுவர்)
பாலும் தெளிதேனும்
பாகும் பருப்பும் இவை
நாலும் கலந்துனக்கு நான்
தருவேன் கோலம் செய்
துங்கக்கரி முகத்து தூமணியே நீ
எனக்கு
சங்கத் தமிழ் மூன்றும் தா
இந்தப் பாடலின்
மூலம் பால், தெளிந்த
அதாவது சுத்தமான தேன், பாகு -
சரக்கரைப் பாகு,
பருப்பு கலந்து இப்படி எல்லாம்
கலப்பது எது என நாம் பார்த்தால்
அது சர்க்கரைப் பொங்கலாகும்.
சர்க்கரைப் பொங்கல்
நிவேதனாமாக நாம் படைத்தால்
நமக்கு வினாயகர் இயல், இசை, நாடகம்
எனும் சங்கத் தமிழ் மூன்றும்
அதாவது இவை மூன்றும் சேர்ந்த பரிபூரண
கல்வியைத் தருவார் என நாம்
புரிந்து கொள்ளலாம்.
வாக்குண்டாம் நல்ல
மனமுண்டாம் மாமலராள்
நோக்குண்டாம்
மேனிநுடங்காது பூக்கொண்டு
துப்பார் திருமேனி தும்பிக்கையான்
பாதம் தப்பாமல் சார்வார்
தமக்கு
வாக்கு அதாவது நல்லறிவு கிடைக்கும்.
தீய எண்ணம் இல்லாத நல்ல
எண்ணங்கள் உள்ள மனது கிடைக்கும்.
மாமலரால் ஆகிய
மகாலட்சுமி தேவியின் பார்வை கிட்டும்.
உடல் நோயினால் துவலாது.
இவையெல்லாம் செந்நிற
திருமேனியினையுடைய தும்பிக்கையானாகிய
வினாயகப் பெருமானின்
பாதத்தினை பல விதமான பூக்களைக்
கொண்டு தப்பாமல்
அதாவது நாள் தவறாமல்
வேளை தவறாது பணிந்து வணங்குபவர்களிற்கு கிட்டும்.
இதன் மூலம் நாம் மலர்களினால்
முறைப்படி வணங்கினால்
இல்வாழ்க்கையிற்கு வேண்டிய அனைத்தையும்
வினாயகப் பெருமான் தருவார்
என்பதனை அறிகிறோம். இந்த
பாடலை ஒரு மருத்துவ பாடலாகவும்
கொள்பவர்கள் உண்டு.
கைத்தலம் நிறைகனி அப்ப
மொடு அவல்
பொரி கப்பிய கரிமுகன் அடிபேணி
கற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவ
கற்பகம் எனவினை கடிதேகும்
மத்தமும் மதியமும் வைத்திடும் அரன்மகன்
மற்பொரு திரள்புய மதயானை
மத்தள
வயிறனை உத்தமி புதல்வனை மட்டு அவிழ்
மலர்கொ (ண்) டு பணிவேனே
முத்தமிழ் அடைவினை முற்படு கிரிதனில் முற்பட
எழுதிய முதல்வோனே
முப்புரம் எரி செய்த அச்சிவன்
உறை ரதம்
அச்சு அது பொடிசெய்த
அதிதீரா
அத்துயர் அது கொ (ண்)
டு சுப்பிரமணி படும் அப்புனம்
அதனிடை இபமாகி
அக்குற மகளுடன்
அச்சிறு முருகனை அக்கணம் மணம் அருள்
பெருமாளே
இரு கைகளிலும்
நிறைந்துள்ள பழங்கள், அப்பம், அவல்,
பொரி ஆகியவற்றை விரும்பி உண்ணும்
யானை முகக் கடவுளின்
திருவடிகளை போற்றி வணங்கி, கல்வி கற்கும்
அடியவர்களுடைய மூளையில்
நீங்காது வாழ்பவனே,
நினைத்தவற்றை அளிக்கும் கற்பக
விருட்சமே என்று உன்னைத்
துதி செய்தால் வினைகள் யாவும்
விரைவில் ஓடிப் போய்விடும். ஊமத்த மலரையும,
குளிர்ச்சியான கதிரினையுடைய
பிறைச்சந்திரனையும் சடையில் தரித்த
சிவபெருமானுடைய மகன் ஆவர்.
மற்போருக்குத் தக்க திரண்ட
தோள்களையுடையவரும், மத
யானையை ஒத்தவரும் ஆவர். மத்தளம்
போன்ற பெருவயிறு உடையவரும்,
உத்தமியாகிய பார்வதி தேவியின் மகனும்
ஆகியவரை தேன் துளிர்க்கும் புது மலர்களைக்
கொண்டு நான் வணங்குவேன்.
மலைகளுள் முற்பட்டதான மேரு மலையில்
முத்தமிழ்களான இயல், இசை, நாடகம்
ஆகியவற்றிற்கு முறைமைநூல், முதல் முதலில்
எழுதிய முதன்மையானவனே.
தங்களை வணங்காமல் அசுரர்களின்
மூன்று கோட்டைகளையும் எரிக்கச் சென்ற
சிவபெருமானை சிவன் என்றும்
பாராமல் தப்பு செய்தால்
தண்டனை உண்டு என்ற தத்துவத்தைக்
காட்டுவதற்காக அவரின்
தேர்க்காலினினை அதாவது அச்சினை உடைத்த
நேர்மையான வீரனே. தன் தம்பியாகிய
சுப்பிரமணியன்
வள்ளி மீது கொண்ட
காதலினால்
துயரத்தோடு தன்னை வழிபடாமல் நடந்த
அந்தத் தினைப் புனத்திடையில்
யானையாகத்
தோன்றி இடையூறு செயதார்.
(தனது தவறை உணர்ந்த முருகப்
பெருமான் வினாயகரை வணங்கிய
உடனேயே) அந்தக் குற மகளாகிய
வள்ளியுடன் அந்தச் சிறிய முருக
வேளை அத்தருணத்திலேயே மணம்
புரியுமாறு திருவருள் புரிந்த எம்
பெருமான் வினாயகக் கடவுளே.
இந்த திருப்புகழ்
பாடலின் மூலம் வினாயகரின்
பெருமையையும் எதை படைத்து வணங்க
வேண்டும் என்பதனையும் நாம்
தெரிந்து கொள்ளலாம்.
மேற் கண்ட
பாடகளிலிருந்து வினாயகரிற்கு மனம
நிறைவாய் > கை நிறைவாய் பழங்கள் >
அப்பம் > அவல் > பொரி > சர்க்கரைப்
பொங்கல் > பலவகையான
மனதிற்கு நிறைந்த பூக்கள்
கொண்டு வழிபட வேண்டும்.
அப்படி வழிபட்டால் இன்மையும் > மறுமையும்
நிறைந்திருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக