முருக வழிபாடு தொன்மை மிக்கது. சிவனின் மகனான முருகனுக்கும் திராவிடத் தமிழர்களுக்கும் இருக்கக்கூடிய தொடர்பு என்பது வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்டதாகும். தமிழர்களின் பண்பாட்டோடும் மொழியோடும் தத்துவத்தோடும் பழக்க வழக்கங்களோடும் இம்முருக வழிபாடு பின்னிப் பிணைந்திருந்த தன்மையைச் சங்ககால இலக்கியங்களான திருமுருகாற்றுப்படை, பரிபாடல் என்பன மிகச் சிறப்பாகக் கூறி நிற்கின்றன.
ஞாயிறு, 28 செப்டம்பர், 2014
முருகன் 3
நூல்சிறப்புதொகு
இந்நூல் சொற்பொருட் சுவையும் பக்திச் சுவையும் மிக்கதாக இருப்பதால் தமிழ்ப்புலவர்களாலும் முருகன் அடியார்களாலும் மிகவும் சிறப்பாகப் போற்றப்படுகிறது.இதனாலேயே "கந்த புராணத்தில் இல்லாதது வேறு எந்த புராணத்திலும் இல்லை" என சிறப்பிக்கப்படுகின்றது
முருகன் 3
கந்த புராணம்தொகு
பதினெண் புராணங்களும் வடமொழியில் இருப்பவை. இவற்றுள், ஸ்கந்த புராணத்தின் சங்கர சங்கிதையில் சிவரகசிய காண்டத்தில் வரும் முதல் ஆறுகாண்டங்களின் தமிழ் மொழிபெயர்ப்பே கந்த புராணம்.
உற்பத்தி காண்டம், அசுர காண்டம், மகேந்திர காண்டம், யுத்த காண்டம், தேவ காண்டம், தட்ச காண்டம் என்று ஆறு காண்டங்களை உடையது. இது 91 படலங்களையும், 10345 பாடல்களையும் உடைய இது முருகப்பெருமானின் வரலாற்றை முறையாகவும் முழுமையாகவும் கூறுகிறது.
முருகன் 2
கந்த சஷ்டி கவசம் என்பது பால தேவராய சுவாமிகளால் முருகப் பெருமான் மீது இயற்றப்பட்ட பாடலாகும்.
'காக்க' என இறைவனை வேண்டிக்கொள்ளும் பாடல்களைக் கவசம் என்பர். பிற்காலத்தில் தமிழில் அச்சிடப்பட்டு வழங்கும் கவச நூல்கள் ஆறு. அவற்றில் இந்த நூல்தான் பெரிதும் போற்றப்படுகிறது. இதில் எழுத்து மந்திர உச்சாடணங்கள் உள்ளன. பலர் இதன் பாடல்களை மனப்பாடம் செய்து போற்றி வழிபடுகின்றனர். பழனி முருகன்மீது பாடப்பட்டது. பாடல் வரிகளில் யாருக்காக, யாரைக்குறித்து, யாரால், அல்லது பாடுபவர் பெயரை பாடல் வரிகளில் எழுதுவது அக்கால மரபு என்கின்றனர்.
நூலின் காலம் 16ஆம் நூற்றாண்டு. [1]
கந்த சஷ்டி கவசத்தை பால தேவராய சுவாமிகள் அரங்கேற்றிய தலம் ஈரோடு அருகில் உள்ள சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்.கந்த சஷ்டி கவசத்தில் வரும் ’சிரகிரி வேலவன்’ எனும் வரிகள் சென்னிமலை இறைவனைக் குறிப்பவை.[2]
இந்தப் பாடலின் இசை வடிவம் பலரால் பாடப்பட்டுள்ளது. இதற்கு ஒளிக் காட்சி எதுவும் இல்லை, அதனால் முருகப் பெருமான் அலங்காரம், திருக்கல்யாணம் உள்ளிட்ட நிகழ்வுகளை இசையுடன் இணைத்துப் பல தொலைக்காட்சியில் காலையிலும் மாலையிலும் [3] ஒளிபரப்புகின்றனர்.
முருகன்
முருகன் சைவக் கடவுளான சிவன்- பார்வதி தம்பதிகளுக்கு மகனாவார். சிவபெருமான் தனது ஆறு முகத்திலிருந்தும் நெற்றிக்கண் நெருப்பினை வெளியிட, அதை தாங்கிய வாயு பகவான் சரவணப்பொய்கை ஆற்றில் விட்டார். அந்த நெருப்புகள் ஆறு குழந்தைகளாக கார்த்திகை பெண்களிடம் வளர்ந்தனர். அன்னையான பார்வதி ஆறு குழந்தைகளையும் ஒருசேர அணைக்கும் பொழுது, ஆறுமுகனாக முருகன் தோன்றினார் என்று இந்துசமய நூல்கள் கூறுகின்றன.
இவருக்கு கணங்களின் அதிபதியான கணபதி அண்ணனாகவும், வைணவக் கடவுளான திருமால் மாமனாகவும் அறியப்படுகிறார்கள். மேலும் முருகனுக்கு இந்திரன் மகளான தெய்வானை என்ற மனைவியும், குறத்திப் பெண்ணான வள்ளி என்ற பெண்ணும் மனைவிகளாவர்.
தமிழர்களின் குறிஞ்சி நிலத்தெய்வமான சேயோன் வழிபாட்டினை சைவ சமயம் இணைத்துக் கொண்டதாகவும் வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள்.
இவரை அதிகம் வழிபடுபவர்கள் தமிழர்களே; இதனால், இவர் தமிழ்க் கடவுள் என்றும் அழைக்கப்படுகிறார். இவர் அன்பின் ஐந்திணையில் தலையாயதாகிய குறிஞ்சி நிலத்தின் கடவுள் ஆவார். பண்டைய காலத்தில் கௌமாரம் எனும் தனித்த மதமாக இருந்த முருகன் வழிபாடு பின்பு சைவ சமயத்துடன் இணைந்தது.
பெயர்க் காரணம்
"முருகு" என்ற சொல்லிற்கு அழகு, இளமை என்று பொருள்படும். ஆகவே முருகன் என்றால் அழகன் என்பதாகும். மெல்லின, இடையின, வல்லின மெய் எழுத்துக்களுடன் உ எனும் உயிரெழுத்து ஒவ்வொன்றுடனும் சேர்ந்து முருகு (ம்+உ, ர்+உ, க்+உ - மு ரு கு) என்றானதால், இம்மூன்றும் இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி இவைகளைக் குறிக்கும்.
வேறு பெயர்கள்
முருகன் - அழகுடையவன்.
குமரன் - இறைவனாய் எழுந்தருளியிருப்பவன்.
குகன் - அன்பர்களின் இதயமாகிய குகையில் எழுந்தருளி இருப்பவன் .
காங்கேயன் - கங்கையால் தாங்கப்பட்டவன்.
சரவணபவன் - சரவணப்பொய்கையில் உதித்தவன்.
சேனாதிபதி - சேனைகளின் தலைவன்.
வேலன் - வேலினை ஏந்தியவன்.
சுவாமிநாதன் - தந்தைக்கு உபதேசம் செய்தவன்.
கந்தன் - ஒன்று சேர்க்கப்பட்டவன்.
கார்த்திகேயன் - கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டவன்.
சண்முகன் - ஆறு முகங்களை உடையவன்.
தண்டாயுத பாணி - தண்டாயுதத்தைக் கரத்தில் ஏந்தியவன்.
வடிவேலன் - அழகுடைய வேலை ஏந்தியவன்.
சுப்பிரமணியன் - மேலான பிரமத்தின் பொருளாக இருப்பவன்.
மயில்வாகனன்
ஆறுபடை வீடுடையோன்
வள்ளற்பெருமான்
சுப்ரமணியன்
சோமாஸ்கந்தன்
முத்தையன்
சேயோன்
சேந்தன்
விசாகன்
சுரேஷன்
செவ்வேள்
சரவணபவன்
கடம்பன்
ஆறுமுகன் - ஆறு முகங்களை உடையவன்.
சிவகுமரன் - சிவனுடைய மகன்.
வேலாயுதன், சிங்கார வேலன் - வேல் என்ற ஆயுதத்தினை உடையவன்
ஆண்டியப்பன் - ஆண்டியாக நின்றவன்
சரவணன் -
கார்த்திகேயன் -
கந்தசாமி -
குமரன் -
சுவாமிநாதன் -
செந்தில்நாதன் -
அயிலவன்-வேற்படைஉடையவன், முருகக்கடவுள்.
போன்ற பல பெயர்களால் வழங்கப்படுகிறார்.
முருக புராணம்
தோற்றம்
புராணங்கள் இவரை சிவனின் மகனாக சித்தரிக்கின்றன. புராணங்களின்படி, சிவனிடமிருந்து புறப்பட்ட தீப்பொறி, சரவணப் பொய்கையில் ஆறு பகுதிகளாக விழுந்தது. இது ஆறு குழந்தைகளாக உருப்பெற்றது. கார்த்திகைப் பெண்கள் அறுவர், இந்த ஆறு குழந்தைகளை வளர்த்தனர். பின்னர் ஒரு கார்த்திகைத் திருநாளில் பார்வதி இந்த ஆறு குழந்தைகளையும் இணைத்தார். ஆறு முகங்களைப் பெற்ற இவர் ஆறுமுகன் என்று அழைக்கப் படுகிறார். சிவனைப்போலவே முகத்திற்கு மூன்று கண்கள் என, ஆறுமுகங்களுக்கும் சேர்த்து மொத்தம் பதினெட்டு கண்களை உடையவர்.
பன்னிருகரங்களின் பணிகள்
முருகனின் பன்னிருகரங்களில் இரு கரங்கள் தேவர்களையும், முனிவர்களையும் காக்கிறது. மூன்றாவது கை அங்குசத்தினைச் செலுத்துகிறது. மற்றொரு கை ஆடை உடுத்திய தொடையில் பதிந்திருக்கிறது. ஐந்து மற்றும் ஆறாவது கைகள் வேலைச் சுழற்றுகின்றன. ஏழாவது கை முனிவர்களுக்கு அரும் பொருளை உணர்த்துகிறது. எட்டாவது கை மார்பில் உள்ள மாலையோடு விளங்குகிறது. ஒன்பதாவது கை வளைகளோடு சுழன்று வேள்வியை ஏற்கிறது. பத்தாவது கை மணியை ஒலிக்கிறது. பதினோராவது கை மழையை அருள்கிறது. பன்னிரண்டாவது கை மணமாலை சூட்டுகிறது. [1]
தெய்வானையுடன் திருமணம்
முருகப்பெருமானின் அவதாரத்தின் நோக்கமே அசூரன் சூரபத்மனையும், அவனது சேனைகளையும் அழித்து தேவர்களைக் காப்பது. அதன்படி, முருகப்பெருமான் அவதாரம் செய்து, சூரபத்மனை அழித்து, அவனை மயில் மற்றும் சேவலாக மாற்றி, மயிலை வாகனமாகவும், சேவலை கொடியாகவும் ஏற்றுக் கொண்டு அருளினார்.
சூரபத்மனை முருகப்பெருமான் சம்ஹாரம் செய்ததால் தேவர்கள் துயரம் நீங்கினர். அதனையட்டி, முருகப்பெருமானுக்குத் தன்னுடைய நன்றியைச் செலுத்தும் வகையில் இந்திரன் தனது மகளாகிய தெய்வயானையை திருமணம் செய்து கொடுக்க விரும்பினான். அதன்தொடர்ச்சியாக, முருகப்பெருமான் - தெய்வானை திருமணம் திருப்பரங்குன்றத்தில் நடந்தது.
வழிபாட்டு முறை
அசைவ உணவை உட்கொண்டவர்களின் கடவுளாக இருந்த முருகனை வேலன் என்று மக்கள் வழிபட்டதாகவும், ஆட்டு ரத்தத்துடன் கலந்த தினை மாவை அவருக்கு படைத்ததாகவும், அதன் பின் வந்த சமஸ்கிருத வழிபாட்டு முறையில் முருகன் வழிபாடு சைவ வழிபாடாக மாறியதாகவும் முனைவர் சண்முகம் பிள்ளை குறிப்பிடுகிறார்.[2]
விழாக்கள்
கார்த்திகை மாத கார்த்திகைத் திருநாள் முருகப் பெருமானின் விசேட தினமாக கொண்டாடப்படுகிறது. வைகாசி மாத விசாக நட்சத்திர தினம் இவரது ஜென்ம நட்சத்திர தினமாக கொண்டாடப்படுகிறது. முருகப் பெருமான் சூரபதுமன் என்னும் அரக்கனை அழித்ததை ஒட்டி கந்த சஷ்டி என்னும் திருநாள் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
நூல்கள்
கந்தபுராணம் என்னும் பாடற்தொகுதி கச்சியப்ப சிவாச்சாரியாரால் இயற்றப்பட்டது. இது முருகப்பெருமானின் வரலாற்றை எடுத்து உரைக்கிறது. சங்ககால இலக்கியமான திருமுருகாற்றுப்படை, முருகப்பெருமானைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு, அவனது ஆறுபடை வீடுகளையும் பாடும் காவியம் ஆகும்.
மேலும் சண்முகக் கவசம், திருப்புகழ், கந்தர் களிவெண்பா, குமரவேல் பதிற்றுப்பத்தந்தாதி, சஷ்டி கவசம், கந்தர் அநுபுதி போன்ற நூல்களும் முருகனின் பெருமை சொல்வன.
முருகன் குறித்த பழமொழிகள்
வேலை வணங்குவதே வேலை.
சுக்குக்கு மிஞ்சிய வைத்தியமில்லை; சுப்பிரமணியருக்கு மிஞ்சிய தெய்வமில்லை.
வயலூர் இருக்க அயலூர் தேவையா?
காசுக்குக் கம்பன் கருணைக்கு அருணகிரி.
அப்பனைப் பாடிய வாயால் - ஆண்டிச் சுப்பனைப் பாடுவேனா?
முருகனுக்கு மிஞ்சிய தெய்வமில்லை;மிளகுக்கு மிஞ்சிய மருத்துவம் இல்லை.
சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும் (சஷ்டியில் இருந்தால் அகப்பையில் வரும்)
கந்தபுராணத்தில் இல்லாதது எந்த புராணத்திலும் இல்லை.
கந்தன் களவுக்குக் கணபதி சாட்சியாம்
பழநி பழநின்னா பஞ்சாமிர்தம் வந்திடுமா?
சென்னிமலை சிவன்மலை சேர்ந்ததோர் பழனிமலை.
செந்தில் நமக்கிருக்கச் சொந்தம் நமக்கெதற்கு?
திருத்தணி முருகன் வழித்துணை வருவான்
வேலனுக்கு ஆனை சாட்சி.
வேலிருக்க வினையுமில்லை; மயிலிருக்கப் பயமுமில்லை.
செட்டிக் கப்பலுக்குச் செந்தூரான் துணை.
முருகன் ஆலய வழிபாடுகள்
தமிழகத்திலும் தமிழர்கள் வாழும் பிற இடங்களிலும் அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் நடைபெறும் பல்வேறு வகையான வழிபாடுகள், இங்கே பட்டியலிடப்பட்டுள்ளன:
காவடி எடுத்தல்
அலகு குத்துதல்
பால்குடம் எடுத்தல்
முடி இறக்குதல் (மொட்டை போட்டுக் கொள்ள நேர்ந்து அதன்படி செய்தல்)
பாத யாத்திரை
முதன்மைக் கட்டுரை: பத்துமலை
Thirumurugan Poondi car festival
முருகனின் அடியவர்கள்
அகத்தியர்
நக்கீரர்
ஔவையார்
அருணகிரிநாதர்
குமரகுருபரர்
பாம்பன் சுவாமிகள்
கிருபானந்தவாரியார்
கோவில்கள்
முருகன் கோவிகள் முருக வழிபாடு மிகுந்த தமிழ்நாட்டில் அதி்கம் காண்ப்படுகின்றன. வடபழனி முருகன் கோவில், தேனாம்பேட்டை பாலதண்டாயுதபாணி திருக்கோவில், மயிலை சிங்காரவேலன், பெசன்ட் நகர் அறுபடையப்பன் கோவில், குமரக்குன்று, கந்தகோட்டம், குன்றத்தூர் என தமிழகத்தின் தலைநகரான சென்னையில் கோவி்ல்கள் பல அமைந்துள்ளன.
அறுபடை வீடுகள்
முதன்மைக் கட்டுரை: அறுபடைவீடுகள்
அறுபடை முருகன்கள்
திருப்பரங்குன்றம் - சூரபத்மனை போரில் வென்ற பின் இந்திரன் மகளான தெய்வானையை மணந்த திருத்தலமிது.
திருச்செந்தூர் - அசுரன் சூரபத்மனோடு முருகன் போரிட்டு வென்று வெற்றி வாகைச் சூடிய திருத்தலமிது.
பழநி - மாங்கனிக்காக தமையன் விநாயகரோடு போட்டியிட்டு தோற்ற கோபத்தில் தண்டாயுதபாணியாக நின்ற திருத்தலமிது.
சுவாமிமலை - தன் தந்தை சிவனுக்கே பிரணவ மந்திரத்தை ஓதி தகப்பன்சுவாமியாக காட்சிதரும் திருத்தலமிது.
திருத்தணி - சூரனை வதம் செய்தபின் சினம் தணிந்து, குறவர் மகள் வள்ளியை மணந்த திருத்தலமிது.
பழமுதிர்சோலை - ஔவைக்கு பழம் உதிர்த்து, வள்ளி தெய்வானையோடு காட்சிதரும் திருத்தலமிது.
மலேசியா
முருகனின் சிலை, மலேசியா
மலேசியா நாட்டில் பாது குகையில் சுப்பிரமணியர் திருக்கோவில் அமைந்துள்ளது. தைப்பூசம் முதலிய திருவிழாக்கள் இங்கு வெகு விமர்சையாக கொண்டாடப்படுகின்றன.
திங்கள், 22 செப்டம்பர், 2014
வினாயகர் _1
சகல ஐசுவரியங்களும் தரும்
வினாயகர் வழிபாடு.
மனத்தாலே நினைத்தாலே ஓடி வந்து அருள்புரியும்
முதன்மைக் கடவுள் வினாயகர்.
கலியுகத்தின் கருணைக்கடல் பிள்ளையார்.
தன்னை வணங்குபவர்களிற்கு சகல
நலன்களையும் அள்ளி வழங்குபவர்
வினாயகர்.
எந்த
ஒரு காரியம் தொடங்குவதற்கும்
முன் முதலில் வினாயகரை வணங்க
வேண்டும். இப்படிப்பட்ட ஒரு வரத்தை ஈசன்
வினாயகரிற்கு வழங்கியுள்ளார.;
இதை கடைப்பிடிக்காத முருகனும் ஏன் ஈசனும்
கூட காரியம் நிறைவேறாமல் பின்
வினாயகரை வணங்கி எடுத்த காரியம்
செவ்வனே முடித்தனர்.
வினாயகரை அவ்வையார் எழுதிய
வினாயகர் அகவல் அல்லது நக்கீரர்
எழுதிய வினாயகர் திருஅகவல் தினமும்
பாராயணம் செய்து வழிபடலாம்.
நோய்நொடி இல்லாமல் ஏவல்,
காத்து கறுப்பு அண்டாமல் இருக்க
காசிப முனிவர் இயற்றி கச்சியப்ப
சிவாச்சாரியார்
மொழி பெயர்த்த
வினாயகர் கவசம் பாராயணம்
செய்யலாம். நினைத்த காரியம்
நிறைவேற காசிப முனிவர் இயற்றி கச்சியப்ப
சிவாச்சாரியார்
மொழி பெயர்த்த காரிய
சித்தி மாலை பாராயணம்
செய்யலாம்.
முறைப்படி பூசை அறை வைத்து இருப்பவர்கள்
வினாயகர் மூல
மந்திரத்தை அல்லது வினாயகர்
காயத்திரி மந்திரத்தை முறைப்படி ஒரு தகுந்த
குருவிடமிருந்து பெற்று நாளொன்றிற்கு
16, 27, 54, 108, 1008 ::::::::::::
என்று ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில்
செபம் செய்து வரலாம்.
ஒரே எண்ணிக்கையாக தினமும்
செபித்து வருவது சிறப்பாகும். அதிக
எண்ணிக்கையில் ஒரு நாளும் பின் குறைந்த
எண்ணிக்கையில் மறுநாளும்
செபிப்பது உகந்தது அல்ல.
எனவே குறைந்த எண்ணிக்கையில்
ஆரம்பித்து படிப்படியாக
எண்ணிக்கையை அதிகரிப்பதே சிறப்பாகும்.
மூலமந்திரம்:-
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம்
கம் கணபதயே வரவரத
சர்வ ஜனம்மே வசமானய ஸ்வாகா. .
காயத்திரி மந்திரம் :-
தற்புருஷாய வித்மஹே வக்ரதுண்டாய
தீமஹீ
தன்னோ தந்தி ப்ரயோதயாத்.
சிதறு தேங்காய்
பொதுவாக பூசைகள்
தொடங்கும் போதோ அல்லது நல்ல
காரியங்கள் தொடங்கும்
போதோ முதலில்
வினாயகரை நினைத்து தேங்காய்
உடைப்பது வழக்கம். இந்த பழக்கம்
எப்படி வந்தது என்று பார்த்தால்
ஒரு சமயம் வினாயகர் “ மகோற்கடர் ”
என்ற முனிவராக அவதாரம்
எடுத்து காசிப முனிவரின் ஆசிரமத்தில்
தங்கியிருந்தார். இவ்விரு முனிவர்களும்
ஒரு யாகத்திற்காக
புறப்பட்டபோது ஒரு அசுரன் அவர்களைத்
தடுத்து நிறுத்தினான். வினாயகர்
யாகத்திற்காக
கொண்டு சென்ற
கலசங்களின் மேலிருந்த
தேங்காய்களை அவன்
மீது வீசி அவனை வதம்
செய்தார்.
அதாவது ஒரு காரியத்திற்கு செல்லும்
முன் ஏற்பட்ட
தடையை தேங்காயை வீசி எறிந்து வினாயகர்
நீக்கினார். நாம் எந்த காரியம்
செய்யும் முன்னும் தடைகளை நீக்க
வேண்டும் என
வினாயகரை வழிபடுவது வழக்கம். அவர்
காட்டிய வழியில்
தேங்காயை அவரிற்கு பலி கொடுத்து எடுத்த
காரியம் செவ்வனே முடிய வேண்டும்
என வேண்டிக் கொள்கிறோம். மற்றும்
நமது பாவங்கள் தேங்காயைப்
போன்று வினாயகர் அருளால் சிதற
வேண்டும் என்றும் சிதறு காய் போடுவதாக
ஒரு கருத்தும் உள்ளது.
குட்டிக் கும்பிடுதலும் தோப்புக்கரணமும்
ஒரு சமயம்
அகத்திய மாமுனிவர் காவிரி நதியை தனது
கமண்டலத்தில்
அடக்கி வைத்துக்
கொண்டார்.
வினாயகப்
பெருமான்
காகம்
வடிவெடுத்து அந்த
கமண்டலத்தை தட்டி விட்டு காவிரி நதியை விடுவித்தார்.
பின்னர் ஒரு அந்தண
சிறுவனாக
வடிவெடுத்து நின்றார். கோபம்
கொண்ட அகத்திய முனிவர் அந்த
அந்தண சிறுவனின் தலையில் குட்டினார்.
அப்போது வினாயகப் பெருமான்
தனது சுயரூபம் எடுத்து உலக நன்மைக்காக
தான் காவிரி நதியை விடுவித்ததாக
கூறினார். அகத்திய முனிவரும்
தமது தவறிற்கு வருந்தி தன் தலையில்
தானே குட்டி கொண்டு வினாயப்
பெருமானிடம்
தன்னை மன்னித்து அருளும் படி வேண்டிக்
கொண்டார்.
அன்றிலிருந்து தலையில் குட்டிக் கும்பிடும்
பழக்கம் தொடங்கியதாக கருதப்
படுகிறது.
கஜமுகாசுரன் என்ற அசுரன் ஒரு சமயம்
தேவர்களை அடிமைப் படுத்தி தனக்கு தோப்புக்
கரணம் போட்டு வணக்கம் செலுத்த
வைத்தான். வினாயப் பெருமான்
அந்த
அசுரனை அழித்து தேவர்களை விடுவித்தார்.
அசுரனிற்கு போட்ட தோப்புக்
கரணத்தை தேவர்கள் வினாயப்
பெருமானிற்கு போட்டு பக்தியுடன்
வணங்கினர். அன்று முதல் வினாயப்
பெருமானிற்கு தோப்புக்கரணம்
போட்டு வணங்கும் பழக்கம் ஏற்பட்டது.
ஆன்மீக
ரீதியாக நாம் தோப்புக் கரணம் போடும்
போது நமது உடலில் தூங்கிக்
கொண்டிருக்கும்
குண்டலினி சக்தி தட்டி எழுப்பப் படுகிறது.
குட்டிக் கும்பிடும் போது நமது தலையிலிருக்கும்
அமிர்த கலசத்திலிருந்து அமிர்தம்
சிந்தி உடல் பூராவும்
பரவி நமக்கு சுறுசுறுப்பும் புத்துணர்வும்
தருகிறது. இந்த தத்துவத்தை இன்றைய
அறிவியல் உலகமும் ஏற்றுக்
கொள்கிறது.
அருகம்புல் வழிபாடு
அனலாசுரன் என்ற அசுரன்
உலகத்து மக்களைஇ தேவர்களை மிகவும்
துன்புறுத்தி வந்தான்.
தன்னை எதிர்ப்பவர்களை அனலாய்
மாறி தகித்த
விடுவதனாலேயே அவனிற்கு அனலாசுரன்
என்ற பெயர் வந்தது. அவனின்
அட்டூழியங்களை தாங்க முடியாமல்
தேவர்கள் சிவ-சக்தியிடம் முறையிட்டனர்
சிவனும் வினாயகரிடம்
அனலாசுரனை வதம்
செய்யும்படி கூறினார். வினாயகரும்
அனலாசுரனுடன் போரிட்டார்.
அனலாசுரனை வெற்றி கொள்ளமுடியாத
வினாயகர்
அவனை பிடித்து விழுங்கி விட்டார்.
வினாயகரின் வயிற்றுக்குள் சென்ற
அனலாசுரன் அதை வெப்பமடையச்
செய்தான். பிள்ளையாரை அந்த
வெப்பம் கடுமையாக தகித்தது.
அவருக்கு கங்கை நீரால் குடம் குடமாக
கங்கை நீர் அபிசேகம் செய்யப்பட்டது.
ஆனால் எந்த பலனும் கிட்டவில்லை.
அப்போது ஒரு முனிவர்
அருகம்புல்லை கொண்டு வந்து வினாயகரின்
தலை மீது வைத்தார். அனலாசுரன்
வினாயகர்
வயிற்றினுள்ளே சீரணமாகிவிட்டான்.
வினாயகரின் எரிச்சலும் அடங்கியது.
அன்று முதல் வினாயகர்
தன்னை அருகம்புல்லால்
அர்ச்சிப்பவர்களிற்கு தான் சகல
நன்மைகளையும் செய்வேன். என
அருள்பாலித்தார்.
அருகம்புல்
அர்ச்சனையால் ஞானம், கல்வி,
செல்வம் அனைத்தும் கிட்டும்.
வினாயகரிற்கு அர்ச்சித்த
ஒரு அருகம்புல்லிற்கு இந்திரரின்
மணிமுடியே ஈடாகவில்லை என்ற
ஒரு புராணக்கதையும் உள்ளது. முத்தியைத்
தரவல்லது அருகம்புல் உபாசனை.
அதாவது நமது சகல பாவங்களையும்
களைய வல்லது.
சங்கடஹர
சதுர்த்தி அன்று வினாயகரிற்கு அபிசேக
ஆராதனை செய்து வணங்கி வர
காரிய சித்தியாகும். மிகவும் சிறப்பான
பலன் கிடைக்கும். சுக்ல பட்ச
சதுர்த்தியன்று அருகம்புல் சாற்றி வழிபட
எடுத்த காரியங்கள் அனைத்திலும்
வெற்றி என்பது உறுதியாகும்.
நாகசதுர்த்தி அன்று அபிசேக
ஆராதனை செய்து வணங்கி வர
நாகதோசம், ராகு, கேதுக்களினால் ஆன
சகல தோசமும் நீங்கும்.
குழந்தை இல்லாதவர்களிற்கு தோசம்
நீங்கி குழந்தை பாக்கியம் கிட்டும்.
செவ்வாய் , சனிக்கிழமைகளில்
செவ்வரலி அல்லது மஞ்சள்
அரலி மலர் சாற்றி வழிபடுதல்
சிறப்பானது
திருமணத்தடையுள்ளவர்கள் மஞ்சள்
பிள்ளையாரை பித்தளைத் தட்டுக்குள்
வைத்து மூடி அருகம்புல் சாற்றி 48 நாட்கள்
தொடர்ந்து வழிபட்டுவர
திருமணத்தடை நீங்கி திருமணம் நடக்கும்.
கடுமையான
வறுமையில் உள்ளவர்கள்
வெள்ளெருக்கு திரி போட்டு நெய்
தீபமேற்றி வினாயகரை வழிபட்டு வர
வறுமை நீங்கி வளமான
வாழ்வு கிட்டும்.
நவக்கிரக
தோசமுள்ளவர்கள் வினாயகரிற்கு பின்புறம்
வெள்ளெருக்கு திரியில்
நெய்தீபமிட்டு வணங்கி வர
நவக்கிரக தோசம் நீங்கி சகல
சௌபாக்கியங்களும் கிட்டும்.
நீண்ட
நாட்களாக குழந்தையில்லாதவர்கள்,
சதுர்த்தி தோறும் வேப்பமரமும், அரசமரமும்
சேர்ந்த மரத்தடியில் உள்ள
வினாயகரிற்கு முன்னும், பின்னும்
வெள்ளெருக்கு திரியில்
நெய்தீபமிட்டு வணங்கி எறும்புக்கு நாட்டுச்
சர்க்கரை தூவி வர குழந்தைப் பாக்கியம்
கிட்டும்.
சங்கடஹர சதுர்த்தி விரதம்
அனுஷ்டிப்பது எப்படி?
மாசி மாதம் தேய்பிறையில் வரும் சதுர்த்தி
திதியில் இவ்விரதத்தினை ஆரம்பிக்க
வேண்டும். இந்தநாள்
செவ்வாய்க்கிழமை ஆனால் மிகவும்
சிறப்பானதாகும். இதன்
பிறகு ஒவ்வொரு தேய்பிறை சதுர்த்தியிலும்
விரதம் இருந்து சதுர்த்தி விரதம்
அனுஷ்டிக்க வேண்டும். ஒரு வருடம்
இப்படி விரதம் அனுஷ்டித்து பின்னர்
அடுத்த மாசியில் வரும்
தேய’பிறை சதுர்த்தியில்
விரதத்தினை நிறைவு செய்ய வேண்டும்.
சதுர்த்தியன்று அதிகாலையில் எழுந்து ,
காலைக்கடன்களை முடித்த பின்னர்
குளித்துஇ திருநீறு பூசி வினாயகர்
அகவல் போன்ற
பாடல்களை பாடி விரதத்தினை ஆரம்பிக்க
வேண்டும். மாலையில் சதுர்த்தி பூசையில்
கலந்து கொண்ட பின்னர்இ
மிளகு கலந்த
நீரினை பருகி விரதத்தினை நிறைவு செய்ய
வேண்டும். பின்னர் பால் பழம்
அருந்தலாம். முடியாதவர்கள்
உணவு அருந்தலாம்.
இந்த
விரதத்தை ஆயுள் முழுவதும் அனுஸ்டிக்க
வேண்டியதில்லை ஒரு வருடம் முறையாக
அனுஸ்டிப்பது போதுமானது. இந்த
விரதத்தினை முறைப்படி அனுஸ்டித்தால்
வாழ்க்கையில் சகலமும் நமது எண்ணம்
போல் ஈடேறும்.
சதுராவ்ருத்தி தர்ப்பணம்.
444
மந்திரங்களைக் கொண்ட
சதுராவ்ருத்தி தர்ப்பணம்
வினாயகரிற்கு மிகவும் பிடித்தமான
ஒரு சிறந்த வினாகர் அருள்
பெறக்கூடிய வழிபாட்டு முறையாகும்.
இப்போது உலகில் இந்த
முறையை அனுஸ்டிப்பவர்கள் இல்லை என்ற
அளவிற்கு அருகி வந்து விட்டது.
இதனை செய்தால்
அனைத்து தேவர்களும் வசியமாவார்கள்.
மாகாலட்சுமி நித்ய வாசம்
செய்வார். வாக்கில்
சரஸ்வதி குடிகொள்வார்.
எதிரிகள் தொல்லை அழிந்து போகும்.
எண்ணிய காரியம் நிறைவேறும். குடும்பம்
என்றும் பேரானந்த வாழ்வு வாழும்.
ஆனால்
இதனை எளிதில் செய்ய முடியாது.
நவக்கிரகங்கள் இதனை செய்ய
விடாமல் தடைசெய்யும். தெய்வ
அனுக்கிரகமும், தகுந்த குருவின்
ஆசியுடையவர்களால்
மட்டுமே அதனை செய்ய முடியும் இந்த
உபாசனை கடைசி ஜென்மம்
உள்ளவர்களிற்கு மட்டுமெ கிட்டும்
என்பதும் ஒரு ஐதீகமாகும்.
ஆலயம் செல்லும் போது வினாயகர்
வழிபாடு:-
முதலில்
வினாயகரிற்கு தேங்காயை சிதறுகாயாக
உடைத்து நாம் செய்த பாவங்கள்
அனைத்தும் நம்மைவிட்டு சிதறி ஓடிவிட வேண்டும்
என வேண்டிக் கொள்ள வேண்டும்.
பின்னர் அவர் சன்னிதானத்தில்
அவரிற்கு முன்னால்
நின்று வலது கையால் இடது காதையும்,
இடது கையால் வலது காதையும்
பிடித்து நன்றாக இருந்து எழும்பி தோப்புக்
கரணம் போடுதல் வேண்டும். அதேபோல
கைகளை வைத்து நெற்றியின்
இரு பொட்டுக்களிலும்
குட்டி கொள்ள வேண்டும். பின்னர்
வினாயகரிற்கு அருகம்புல்
மாலை அணிவித்து தூப, தீப,
அராதனை செய்து அல்லது செய்வித்து வணங்க
வேண்டும். பின்னர் அவரை 3 முறை வலம் வர
வேண்டும்.